திமுக கூட்டணியில் ஒரு கட்சியும் இருக்காது! நாள் குறித்து பரபரப்பு பேட்டி!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வரும் 2021 ஆம் ஆண்டு, மே மாதம் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு திமுக, அதிமுக உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் தற்போது முதலே தயாராகி வருகின்றன. கடந்த வாரம் திமுக இணையதளம் மூலமாக உறுப்பினர் சேர்க்கையை முன்னெடுத்துள்ளது. மேலும் இந்த உறுப்பினர் சேர்க்கையில் முதல் நாள் மட்டும் 30,000 பேர் இணைந்து உள்ளதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

இந்நிலையில், திமுக ஒரு ஆன்லைன் அரசியல் இயக்கமாக மாறிவிட்டது என்று அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜு விமர்சனம் செய்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களைச் சந்தித்த போது தெரிவித்ததாவது, 

திமுக கூட்டணியில் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவே ஒரு கட்சி கூட கூட்டணியில் இருக்காது. தற்போது திமுக தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க முடியாத நிலையில், ஆன்லைன் அரசியல் இயக்கமாக மாறிவிட்டது திமுக. 

திமுக தனது அரசியல் பணிகள், கட்சி பணிகளை ஆன்லைன் மூலம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. சுயமாக இயங்க முடியாமல் ஒரு தனியார் குழுவிடம் கட்சியை ஒப்படைத்து விட்டு அரசியல் செய்கிறது. அதிமுக அப்படியில்லை. எப்போதும் சுயமாக இயங்கக்கூடியது." என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KADAMBOOR RAJU PRESS MEET ABOUT DMK PARTY


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->