ராகுல்காந்திக்கு தடை.! தேர்தல் ஆணையத்துக்கு பறந்த கடிதம்.! கே.எஸ். அழகிரி பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் தங்களது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளன.

அந்த வகையில், தமிழகத்தின் மேற்கு மற்றும் தென் மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பரப்புரை மேற்கொண்டார். மேலும் பள்ளி-கல்லூரி என்று மாணவர்களிடமும், பேராசிரியர்களிடமும் கலந்துரையாடல் என்ற பெயரில் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தில் பிரசாரம் செய்ய தடை விதிக்க கோரி பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

எல் முருகன் தேர்தல் ஆணையத்திற்கு எழுதியுள்ள அந்த கடிதத்தில், "தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக ராகுல் காந்தி தமிழகத்தில் பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும். ராகுல் காந்தி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும்" எனத் தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவிக்கையில், "தேர்தல் விதிகள் எதையும் ராகுல் காந்தி மீறவில்லை, பாரதிய ஜனதா கட்சி தான் தேர்தல் விதிகளை மீறி செயல்படும்" என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

K S ALAIGIRI say about rahul election campaign


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->