மத்திய பிரதேசத்தில் அடுத்தடுத்து மாயமாகும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்.. நடப்பது என்ன? முதல்வர் ஷாக்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் மத்திய பிரதேசம் மாநிலத்தில் கமல்நாத்தின் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியானது நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சிக்கு தனிப்பெரும்பான்மை இல்லாத காரணத்தால் சுயேச்சை மற்றும் இதர கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி நடைபெற்று வருகிறது. 3 மாநிலங்களவை காலியிடத்திற்கு வரும் 26 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் நிலையில், கடந்த வாரத்தின் போது 8 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கடத்தப்பட்டதாக பேச்சு எழுந்தது.

மேலும், ஆட்சியை கலைக்க இவர்களை கடத்தி, ஹரியானா பகுதியில் உள்ள விடுதியில் அடைத்து வைத்துள்ளதாக பாரதிய ஜனதா கட்சியின் மீது காங்கிரஸ் குற்றம் சாட்டியிருந்தது. இந்த விஷயத்தை ஏற்க மறுத்த பாரதிய ஜனதா மறுப்பு தெரிவித்த நிலையில், எம்.எல்.ஏக்கள் 8 பேரும் மீண்டும் வந்து கமல்நாத்திற்கு ஆதரவை தெரிவித்து பிரச்சனையை முடித்து வைத்தனர்.

இந்த நேரத்தில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஜோதிர் ஆத்தியா மற்றும் இவரது ஆதரவாளர்கள் 17 எம்.எல்.ஏக்களை காணவில்லை. இவர்களை அலைபேசி எண் மற்றும் 17 எம்.எல்.ஏக்களின் அலைபேசி எண்ணிற்கும் தொடர்பு கொண்டு பலனில்லை. 

இதில் 17 எம்.எல்.ஏக்கள் மட்டுமல்லாது 6 மந்திரிகளும் அடங்கியுள்ளார். இவர்களின் அலைபேசி அணைத்துவைக்கப்ட்டு இருக்கும் சூழலில், 17 பேரும் பெங்களூருக்கு விமானத்தில் அழைத்து வரப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. கமல்நாத் முதல்வர் பதவியில் நீடித்து வரும் நிலையில், மாநில காங்கிரஸ் பதவியை கைப்பற்ற ஜோதிர் ஆதித்யா காய் நகர்த்துவதாக தெரியவருகிறது.

இந்த விஷயம் தொடர்பாக கமல்நாத்திற்கும் - ஜோதிர் ஆதித்ய சிந்தியாவிற்கும் மோதல் இருந்து வந்ததாக தெரியவருகிறது. இந்த விஷயம் தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகளை கேட்டால் கவலை வேண்டாம் பிரச்சனை சரியாகிவிடும் என்று தெரிவித்தனர். மேலும், டெல்லிக்கு கட்சி தலைமையுடன் ஆலோசனை மேற்கொள்ள சென்ற முதலமைச்சர் கமல் நாத், பயணத்தை அவசரமாக முடித்துவிட்டு போபாலிற்கு திரும்பியுள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jyotiraditya Scindia hide with 17 mla in madhya pradesh


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->