இன்று 'ஜான் பென்னிகுவிக்' பிறந்தநாள்: ஓபிஎஸ்., இபிஎஸ்., வாழ்த்து.! - Seithipunal
Seithipunal


முல்லை பெரியார் அணையினை தன் சொந்த செலவில் கட்டி மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும், அணையை கட்டிய பொறியாளர் 'ஜான் பென்னிகுவிக்' அவர்கள் பிறந்த தினம் இன்று. அவரின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி வெளியிட்டுள்ள செய்தியில், "தென்மாவட்ட மக்களின் கனவான முல்லை பெரியார் அணையினை தன் சொந்த செலவில் கட்டி மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும், அணையை கட்டிய பொறியாளர் 'ஜான் பென்னிகுவிக்' அவர்கள் பிறந்த தினத்தில் அவரைப் போற்றி வணங்குகிறேன். இத்தருணத்தில் ஒரு விவசாயியாக எனது நன்றியையும் உரித்தாக்கி கொள்கிறேன்." என்று தெரிவித்துள்ளார். 


தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய்தியில், "தன்னலமின்றி தனது குடும்பச் சொத்துகளை விற்று முல்லைப் பெரியாறு அணைகட்டி தென் மாவட்டங்கள் உட்பட தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திய ஜான் பென்னிகுவிக் அவர்களின் பிறந்த நாளான இப்பொன்னாளில், அவர்தம் அரும்பணிகளையும், தியாகங்களையும் நன்றியோடு நினைவுகூர்ந்து போற்றி வணங்கிடுவோம்." என்று தெரிவித்துள்ளார். 


________________


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

john pennicuik birth day


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->