நான் தமிழக முதல்வர் ஆனதும்.. இதைத்தான் முதலில் செய்வேன்.! முக ஸ்டாலின் சூளுரை.!! - Seithipunal
Seithipunal


வரும் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில்கொண்டு, திமுக சார்பில், தமிழகம் முழுவதும் ஊராட்சி சபை கூட்டம் நடத்த உள்ளதாக அறிவித்திருந்தார். அதன்படி இன்று திருவாரூர் மாவட்டம், புலிவலம் ஊராட்சியில் முதல் திமுக ஊராட்சி சபை கூட்டத்தை தொடங்கி வைத்து பொதுமக்களிடம் ஸ்டாலின் பேசினார்.

அதில், ''பழைய காலத்தில் குடவோலை முறையில்தான் மக்கள் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டனர். மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்பதற்காகவே எம்பி, எம் எல் ஏக்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். மக்களை சந்திப்போம், மனங்களை வெல்வோம் என தனது பயணத்தை தொடங்கியதாக'' ஸ்டாலின் கூறினார்.

இதனையடுத்து, தஞ்சாவூர் மாவட்டம் மாதாகோட்டையில் ஊராட்சி சபைக் கூட்டத்தை தொடங்கி வைத்து திமுக தலைவர் ஸ்டாலின் பேசிய முக ஸ்டாலின், ''மக்களுக்கு ஆட்சி மாற்றம் வர வேண்டும் என எதிர்பார்ப்பு உள்ளது. மக்களை சந்திக்க கிராமங்களுக்கு வருவது, கோவிலுக்கு வருவதை போல் உணர்கிறேன். நாம் நினைப்பவர்கள் பிரதமராக வந்தால்தான் தமிழகத்திற்கு தேவையானதை பெற முடியும்.



 

தமிழகத்தில் 'கமிஷன் – கலெக்ஷன் – கரப்ஷன்’ ஆட்சியும், மத்தியில் ’பாசிச – நாசிச’ ஆட்சியும் நடைபெறுகிறது. மத்திய, மாநில அரசுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்; அது திமுகவுக்கு தொடக்கப்புள்ளியாக இருக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலோ அல்லது உள்ளாட்சி தேர்தலோ வரலாம். 

தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் இருந்தபோது உடல்நிலை குறித்து முறையாக அறிக்கை கொடுத்தது திமுக. ஆனால், ஜெ. மருத்துவமனையில் இருந்தபோது உடல்நிலை குறித்து தெளிவான அறிக்கைகள் வழங்கப்படவில்லை. எனவே, ஜெயலலிதா மறைவில் மர்மம் உள்ளது. ஜெயலலிதா மரணம் பற்றி விசாரணை செய்து, யார் காரணம் என்றாலும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அவர்களை சிறையில் அடைப்போம்'' என்று முக ஸ்டாலின் பேசினார்.
 



 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jeyalalitha death issue dmk find the victim


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->