ஜெகன் மோகன் ரெட்டியை பழிவாங்க எண்ணம்.! வைக்கப்பட்ட ஆப்பு., வெலவெலத்த அதிகாரி.!  - Seithipunal
Seithipunal


முதல்வராக பொறுப்பேற்ற நாள் முதலே ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி மக்களிடம் வரவேற்பை பெற்று வருகின்றார். 

ரூ.5 கோடி செலவில் பிரஜா வேதிகா கட்டிடம் முந்தைய ஆட்சிக்காலத்தில் சந்திரபாபு நாயுடு தலைமையில் கட்டப்பட்டது. இந்த வீடு சந்திரபாபு நாயுடு வீட்டின் அருகேயே கட்டப்பட்டது குறிப்பிடதக்கது. 

jagan mohan reddy, seithipunal

ஜெகன் மோகன் ரெட்டி ‘குற்றம் செய்தது அரசியல்வாதியாக இருந்தாலும், அது ஏற்றுக் கொள்ளப்படாது’ என கூறி, இந்த கட்டிடம் முறையாக கட்டப்படவில்லை என்பதால் இதனை இடிக்க உத்தரவு பிறப்பித்தார். 

இதன் காரணமாக, கட்டிடமும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இந்நிலையில், சீனிவாச காந்தி ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக பணமோசடி வழக்குகள் சிலவற்றை விசாரிக்க ஆரம்பித்தார். ஆனால், ஜெகனோ காந்திக்கு எதிராக உத்தரவு ஒன்றை பிறப்பித்ததன் காரணமாக ஐதராபாத்தில் இருக்கும் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு தடுப்புப்பிரிவில் காந்தி பணியாற்றி வருகிறார்.

பிரதமர் மோடியிடம் ஜெகன் மோகன் ரெட்டி கடந்த 2017ம் ஆண்டு அமலாக்கத்துறை உதவி இயக்குநராக இருந்த சீனிவாச காந்தி, சோதனை என்கிற பெயரில் தன்னை வேட்டையாடுகின்றார் என புகார் அளித்திருந்தார். 

jagan mohan reddy, seithipunal

மேலும், இதுகுறித்து கொடுக்கப்பட்ட மனுவில், தெலுங்கு தேசம் கட்சியின் அதிகாரவாளராக காந்தி செயல்படுகிறார். பழிவாங்கவே தங்கள் மீது வீண் நடவடிக்கை எடுப்பதாகவும் தன் மீது ஒருதலைப்பட்சமாக அமலாக்கத்துறை செயல்படுகிறது. எனவும் குறிப்பிட்டு இருந்தார். 

இந்த மனு குறித்த விசாரணையில் அதிகாரிகள் ரூ. 3 கோடியே 75 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். ஜெகன் மோகன் ரெட்டியை பழிவாங்க நினைத்து கடைசியில் தனக்கே வில்லங்கமாக முடிந்ததால் காந்தி அதிருப்தியில் உள்ளதாக தெரிகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jegan mohan reddy action for officer


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->