ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் அவரின் காலில் விழுந்து இருப்பேன்.!! ஜீவஜோதி பரபரப்பு பேட்டி.!!! - Seithipunal
Seithipunal


திருத்துறைப்பூண்டி, தேத்தகுடி ஊரை சேர்ந்த ஜீவஜோதி என்பவர், தனது தாய் மற்றும் கணவருடன் சென்னையில் தங்கி, சரவணபவன் ஹோட்டலில் பணி செய்து வந்தார். ஜீவஜோதி மீது சரவணா பவன் ஹோட்டலின் ஓனர் ராஜகோபாலுக்கு ஆசை ஏற்பட்டு உள்ளது. மேலும் அவரை திருமணம் செய்து கொள்ளவும் ராஜகோபால் முயற்சி செய்து உள்ளார். இதற்கு ஜீவஜோதி மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ராஜகோபால், ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரை ''உன் மனைவியை விட்டுவிட்டு விலகிவிடு'' என்று  மிரட்டியுள்ளார், இந்த நிலையில், கடந்த 2001 ஆண்டு அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி அன்று பிரின்ஸ் சாந்தகுமார் கடத்தப்பட்டார்.

அடுத்த ஐந்தாவது நாள் (31ம் தேதி) கொடைக்கானலில் மலை பள்ளத்தாக்கில் பிரின்ஸ் சாந்தகுமாரின் உடல் பிணமாக கிடந்தது. பிரதே பரிசோதனையில் அவர் கொலை செய்து மலையில் இருந்து வீசப்பட்டு இருப்பது தெரியவந்தது. இந்த சம்பவத்தில், சரவண பவன் அதிபர் ராஜகோபால், மேனேஜர் டேனியல், கார்மேகம், ஜாகீர் உசேன், தமிழ்செல்வன், காசிவிசுவநாதன், பட்டுராஜன், சேது, முருகானந்தம் ஆகிய 9 பேரை கைது செய்தனர். 

இந்த வழக்கின் விசாரணையில், சென்னை உயர்நீதிமன்றம் ராஜகோபாலுக்கு ஆயுள் சிறை‌த் த‌ண்டனை வழங்கியும், கொலைக்கு உடந்தையாக இருந்த 8 பேரில் 5 பேருக்கு ஆயுள் தண்டையும், 3 பேருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தது. 

இந்த வழக்கில் தங்களுக்கு அளித்த தணடனையை எதிர்த்து ராஜகோபால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தார். இதற்கிடையே அவருக்கு இந்த வழக்கில் ஜாமீன் கிடைத்து வெளியில் உள்ளார்.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், சென்னை உயர்நநீதிமன்றம் அளித்த தீர்ப்பான ஆயுள் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது. மேலும் ஜாமீனில் உள்ள ராஜகோபாலுக்கு வரும் ஜுலை 7 ஆம் தேதி வரை சரணடைய அவகாசம் கொடுத்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த தீர்ப்பு குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணான ஜீவஜோதி அவர்கள் ஒரு தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ''இந்த தீர்ப்பு விவரம் தெரிந்த உடன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இதற்காக நீதிபதிகளுக்கு மட்டுமல்ல, மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 

ராஜகோபால் என்னை கொடுமை செய்தபோது, ஜெயலலிதா அவர்களை வீட்டில் நேரில் சந்தித்து விவரங்களை சொன்னேன். அவர் எனக்கு உதவி செய்வதாக உத்தரவாதம் அளித்தார். சாந்தகுமார் கொலை செய்யப்பட்ட போது, அந்த வழக்கை போலீசார் தீவிரமாக புலன் விசாரணை செய்து, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்துள்ளனர். அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஒருவேளை மறைந்த முதல்வர் ஜெயலலிதா தற்போது உயிரோடு இருந்திருந்தால், கண்டிப்பாக அவரை நேரில் சந்தித்து, காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்று இருப்பேன்'' என்று உருக்கமாக பேட்டியளித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் ஜீவஜோதி கடந்த 2006-ம் ஆண்டு தண்டபாணி என்பவரை  2-வது திருமணம் செய்து கொண்டு தஞ்சையில் வசித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

JEEVAJOTHI OPEN TALK


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->