காங்கிரசுடன் கூட்டணி கசந்தது! தனித்து போட்டியிட முடிவெடுத்த தலைவர்!  - Seithipunal
Seithipunal


கர்நாடகாவில் தற்போது நடைபெற்று வரும் எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சிக்கு முன்பாக, காங்கிரஸ் கட்சியும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியும் இணைந்து ஆட்சி அமைத்திருந்தது. 

இந்த கூட்டணியின் அதிருப்தி எம்எல்ஏக்கள் ஆட்சிக்கு எதிராக மாறி, ஆட்சி கவிழ்ந்த நிலையில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் தனித்தனி அணியாக போட்டியிட்ட இந்த மூன்று கட்சிகளும், தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் கூட்டணி அமைத்து மதசார்பற்ற ஜனதா தளம் காங்கிரஸ் ஆட்சியை அமைத்தது. 

அதன்பிறகு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆகட்டும், அதன்பிறகு நடைபெற்ற மக்களவை தேர்தல் ஆகட்டும் இரண்டு கட்சிகளும் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தன. இந்த நிலையில் ஆட்சி கவிழ்ப்பு ஏற்பட்ட பிறகு மதச்சார்பற்ற ஜனதா தளம் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் விரைவில் கர்நாடகாவில் இடைத்தேர்தல் நடைபெறும் என்றால் அந்த தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தனித்தே போட்டியிடும் என அந்தக் கட்சியின் நிறுவனர் தலைவர் தேவகவுடா அறிவித்துள்ளார். இதன் மூலம் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து மதச்சார்பற்ற ஜனதா தளம் வெளியேறுகிறது என்பது உறுதியாகிறது. 

குமாரசாமி தலைமையிலான ஆட்சியை கவிழ்ப்பதற்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம் என அவர்கள் ஏற்கனவே கூறிவருவது குறிப்பிடத்தக்கது. ஆட்சி கவிழ்ந்த வந்த பிறகு காங்கிரஸ் கட்சியை குமாரசாமி அதிகப்படியாக விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

JDS Decide will meet the BY election without alliance


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->