திடீரென ஜெயலலிதா நினைவிடத்திற்கு படையெடுத்த இபிஎஸ்.! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற தேர்தல் மற்றும் தமிழக  சட்டசபைக்கான இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த மே 23-ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. 

அதில் திமுக 37 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதிமுக ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. அது தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட துணை முதலமைச்சர் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றார். 

இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார். இன்று துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் கலந்துகொள்ளவில்லை. பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் ஆய்வு பெற்றுக்கொண்டார்.

சில நாட்கள் முன்பு சென்னை மெரினாவில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம்,  எம்பி ரவீந்திரநாத் குமார் மற்றும் ஆதரவாளர்களுடன் மலர் தூவி மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jayalalitha memorial in eps


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->