நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் குதூகலமான அதிமுக! சாதித்த ஓபிஎஸ், இபிஎஸ்! அதிர்ச்சியில் மற்ற கட்சிகள்!  - Seithipunal
Seithipunal


இன்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பு அதிமுகவினரை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னை மெரினாவில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் மணிமண்டபம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய மக்கள் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் ரவி என்பவர் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். 

அந்த வழக்கில் மெரினா பீச் என்பது கடலோர நிலங்கள் மண்டலம் கட்டுப்பாட்டில் இருப்பதால் கட்டுமானங்கள் கட்டக்கூடாது என்றும் தண்டிக்கப்பட்ட குற்றவாளி அவருக்கு அரசு சார்பில் கட்டிடங்கள் கட்டக்கூடாது நினைவு சின்னங்கள் அமைக்க கூடாது என்றும் அந்த மனுவில் தெரிவித்திருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சத்யநாராயணா, ராஜமாணிக்கம் அமர்வு ஜெயலலிதா தண்டிக்கப்பட்ட குற்றவாளி இல்லை என்றும் அவர் தண்டிக்கப்படுவதற்கு முன்பு இறந்து விட்டார் என்றும். அவர் தண்டிக்கப்படுவதற்கு முன்பே இறந்துவிட்டதால் தீர்ப்பு அளிக்கும் முன்னரே வழக்கிலிருந்து விடுவித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அவருக்கு தண்டனைகள் ஏதும் வழங்கவில்லை என்பதால் அவர் தண்டிக்கப்பட்ட குற்றவாளியாக கருத்தப்படமாட்டார் என அறிவித்தனர். 

அதனால் அவருக்கு அரசு மணிமண்டபம் கட்டுவது அரசின் கொள்கை முடிவாகும் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என அந்த அமர்வு உத்தரவிட்டுள்ளது. மேலும் மாநில கடலோர பாதுகாப்பு மண்டலம் அமைப்பு அனுமதியும், சென்னை மாநகராட்சியும் அனுமதி வழங்கி உள்ளதால் இதற்கு தடைவிதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அந்த வழக்கினை தள்ளுபடி செய்து இந்த வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டுள்ளனர். 

இதன் மூலம் ஜெயலலிதா தண்டிக்கப்பட்ட குற்றவாளி இல்லை என நீதிமன்றம் அறிவித்துள்ளதால் அதிமுகவினர் மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர். மற்ற கட்சிகளின் விமர்சனங்களுக்கு இந்த தீர்ப்பு சிறந்த பதிலாக இருக்கும் என அதிமுகவினர் உற்சாகத்தில் உள்ளனர். ஆனால் மற்ற கட்சிகளை சேர்ந்தவர்கள் ஒரே வழக்கில் மூவருக்கு தணடனை கொடுத்துவிட்டு ஜெயலலிதாவை மட்டும் குற்றவாளி இல்லை என எவ்வாறு அறிவிக்க முடியும் என குழப்பத்தில் சமூக வலைத்தளங்களில் புலம்பி வருகின்றனர். 

எது எப்படியோ தங்களது கட்சி தலைமைக்கு நினைவு சின்னம் அமைப்பதில் ஓபிஎஸ், இபிஎஸ் சாதித்து உள்ளார்கள். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jayalalitha memorial hall in marina beach


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->