திடீரென எழுந்த சர்ச்சை.. ஸ்டாலினுக்கு வைக்கப்பட்ட ஆப்பு.. தலைவர் பதவி..? - Seithipunal
Seithipunal


எம்ஜிஆரின் 103 வது பிறந்தநாள் விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுகவில் கருணாநிதிக்கு பிறகு அவரது மகன் மு.க. ஸ்டாலின் இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டார். தற்போது மு.க. ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு அந்த பதவி வழங்கப்பட்டுள்ளது. ஒரு சாதாரண நபர் திமுகவில் உயர்ந்த பதவிக்கு வர முடியாது. அதிமுகவில் உள்ள அனைவரும் உயர்ந்த பதவிக்கு வரமுடியும். 

அதிமுகவில் இருப்பவர்கள் அனைவருமே முதலமைச்சர் ஆவதற்கு தகுதி உடையவர்கள். ஒரு பழனிசாமி மாற்றுமல்ல. ஓராயிரம் பழனிசாமிகள் அதிமுகவில் உள்ளனர் எனக் கூறினார். 

இதற்கு பதிலளிக்கும் வகையில் திமுக பொருளாளர் துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார். அதிமுகவில் அனைவருமே முதலமைச்சர் தான் என்று சொன்ன எடப்பாடி பழனிசாமி தனது முதலமைச்சர் பதவியை ஓபிஎஸ்க்கு விட்டுக்கொடுப்பாரா என கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில் துரைமுருகனுக்கு பதிலுக்கும் வகையில், மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்துள்ளார். திமுக தலைவர் பதவியை துரைமுருகனுக்கு விட்டுத் தருவாரா ஸ்டாலின்? என கேள்வி எழுப்பி உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jayakumar says dmk leader post


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->