ரஜினி, கமல், விஜய் எல்லாம் வொர்ஸ்ட்.! தல தான் பெஸ்ட்.. அமைச்சர் புகழாரம்.!  - Seithipunal
Seithipunal


தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், நடிகர் அஜித் கண்ணியமானவர் என்றும், தொழில் பக்தி மிக்கவர் என்றும் புகழ்ந்து இருக்கின்றார்.

இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், மறைமுக தேர்தலுக்கு அவசர சட்டம் பிறப்பித்தது ஒன்றும் வியூகம் கிடையாது. ஜனநாயகத்தில் இந்த முறை அனுமதிக்கப்பட்டது தான். மறைமுகத் தேர்தல் என்பது சட்டத்துக்கு உட்பட்டுதான் செயல்படுத்தப்படுகிறது.

சட்டத்திற்கு புறம்பாக நாங்கள் ஒருபோதும் செயல்பட மாட்டோம். கடந்த 2006-ஆம் ஆண்டு திமுக ஆட்சியிலும் மறைமுகத் தேர்தல் நடத்தப்பட்டு உள்ளது. அதிமுக கூட்டணிக்கு முன்பு ரஜினி, கமல் கூட்டணி எல்லாம் தூள் தூளாகி விடும். கமல், ரஜினி, விஜய் அனைவரும் வெறும் பிம்பங்கள்.

தமிழக அரசியலில் எடுபடாதவர்கள். ரஜினி கமலை நம்பி பின் சென்றால் கானல் நீர்தான். நடிகர் அஜித்குமார் தொழில்பக்தி அதிகம் கொண்டவர், அவர் ஒரு நாகரீகமான, மிகவும் பண்பான மனிதர். தன்னுடைய தொழில் மீது மட்டும் கவனம் செலுத்தி வரும் உயர்ந்த மனிதர்.

இடைத் தேர்தலுக்குப் பின்னர் திமுக மிகவும் பயந்து இருக்கின்றது. இது தேறாது என்பது அவர்களுக்கே தெரிந்துவிட்டது. அதனால் உள்ளாட்சி தேர்தலை கண்டு அவர்கள் அஞ்சி நடுங்குகிறார்கள்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jayakumar says about ajithkumar


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->