சசிகலாவின் விடுதலைக்கு பிறகு அதிமுகவில் ஏற்படப்போகும் மாற்றம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி.!! - Seithipunal
Seithipunal


சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா வருகின்ற 27ஆம் தேதி வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சசிகலா விடுதலை ஆனதும், அதிமுக நான்காக உடைய வாய்ப்புள்ளது என முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், பெரம்பூர் ஜமாலியா பகுதியில் உள்ள நியாயவிலைக் கடையில் நேற்று பொங்கல் பரிசு வழங்கும் பணியை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பார்வையிட்டார். அதன்பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,  இதுவரை 70 சதவீத பேருக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இருமொழிக் கொள்கை என்பதில் அதிமுக அரசு உறுதியாக உள்ளது. எந்த இடத்திலும் இந்தி திணிக்கப்படாது மத்திய அரசு தெரிவித்துள்ளதை காப்பாற்ற வேண்டும். 

சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்த அதிமுக நான்கா உடையும் என சிலர் கூறிவருகிறார்கள். அதிமுக உடைவே உடையது. அது ஒரு எக்கு கோட்டை. யார் நினைத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. பொங்கல் பரிசு மக்கள் மத்தியில் கிடைத்துள்ள வரவேற்பு பொறுத்துக் கொள்ள முடியாத திமுகவினர் ரேஷன் கடையில் முக ஸ்டாலின் படத்தை வைத்து நன்றி என பேனர் வைத்துள்ளனர். மேலும், திமுகவினர் மீதான ஊழல் வழக்குகள் விசாரிக்க பெற்ற இடைக்காலத் தடையை திமுக திரும்பப் பெற தயாராக என அமைச்சர் ஜெயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jayakumar press meet on jan 08


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->