சசிகலா வரும்போது அதிமுக நிலைப்பாட்டில் மாற்றம்.? அதிமுக அமைச்சர் பேட்டி.! - Seithipunal
Seithipunal


மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தை கடந்த 27ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். ஜெயலலிதா நினைவிடத்தை பார்வையிட பொதுமக்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கட்டுமான பணிகள் நிறைவடையாததால் அனுமதி மறுக்கப்பட்டதாக பொதுப்பணித் துறை தெரிவித்தது. 

சிறையிலிருந்து விடுதலையான சசிகலா சென்னை வந்ததும் ஜெயலலிதா நினைவிடம் வருவார் என்பதால் நினைவிடத்தில் பொது மக்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக சசிகலா தரப்பினர் கூறி வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ஜெயக்குமார், ஜெயலலிதா நினைவிடம் அமைக்கும் போது  எம்ஜிஆர் நினைவிடம் புதுப்பிக்கப்பட்டு பணிகள் நடைபெற்றது. 

முதற்கட்ட பணிகள் முடிந்ததும் நினைவிடம் திறக்கப்படுவது. அடுத்தகட்டமாக ஜெயலலிதா வாழ்ந்த காலத்தில், சமுதாயத்திற்கு ஆற்றிய பணிகள், திட்டங்கள் குறித்த விவரங்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாணவர்கள், பொதுமக்களுக்கு என அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் வந்து செல்வதால் இடையூறுகள் ஏற்படலாம் என தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மேலும், சசிகலா வரும்போது அதிமுகவின் நிலைப்பாட்டில் மாற்றம் இருக்குமா.? என செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அதற்கு 100 சதவீதம் வாய்ப்பில்லை. அதிமுகவில் எந்த தாக்கமும் ஏற்படாது. அமமுகவை ஆரம்பித்து, மொத்தம் மூன்று சதவீத வாக்குகள் தான் பெற்றனர். பொதுமக்கள், கட்சியினர் மத்தியில் அவர்கள் செயல்பாடுகள் எடுபடாது. 2021 ஆம் ஆண்டு அதிமுக தான் தமிழகத்தை ஆளும் எனக் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jayakumar press meet on feb 03


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->