கூட்டணி கட்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்ட அதிமுக.. அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்புப் பேட்டி.!! - Seithipunal
Seithipunal


சென்னை ராயபுரத்தில் உள்ள ஐந்து பள்ளிகளை சேர்ந்த 738 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டியை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார் . அதன்பிறகு செய்தியாளருக்கு பேட்டி அளித்த அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக தலைமையிலான கூட்டணியில்தான் பாஜக, பாமக, தேமுதிக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் உள்ளது. இது வரும் சட்டமன்ற தேர்தலிலும் தொடரும். இதில் எந்த மாற்றமுமில்லை. 

அதிமுக முடிவின்படி முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் கூட்டணி கட்சிகள் அனைவரும் இதை ஏற்றுக் கொள்வார்கள். முதலமைச்சர் வேட்பாளர் குறித்து பாஜக மேலிடப் பொறுப்பாளர் மற்றும் மாநிலத் தலைவர் முடிவு செய்யும் அதிகாரம் கிடையாது. பாஜக தேசியத் தலைமை மாறுபட்ட கருத்தை கூற மாட்டார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. 

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். கூட்டணி தொகுதிப் பங்கீடு தொடர்பாக அதற்காக அமைக்கப்பட்டுள்ள குழு முடிவு செய்யும். நடிகர் கமலஹாசன் அரசியலிலும் நடித்துவருகிறார். அரசியலில் ஆஸ்கார் விருது வழங்கினால் அது அவருக்கு அளிக்கலாம். எந்த கடனும் வாங்காமல் வளர்ச்சி அடைய முடியாது. உலகின் கடன் வாங்காத மாநிலம், நாடு உண்டா.?  திமுக ஒரு ஓடாத சினிமா. அதை பற்றி யாரும் பேச மாட்டார்கள். ஆனால் அதிமுக வெளிச்சத்தில் இருப்பதால் எங்களை பற்றி அதிகம் பேசுகிறார்கள் என கூறினார்.

ஆனால், பாஜகவினர் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமையும் என அழுத்தமாகக் கூறி வருகின்றனர். இதற்கு முட்டுக்கட்டை போடும் விதமாக அமைச்சர் ஜெயக்குமார் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jayakumar press meet on dec 31


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->