சசிகலா அதிமுகவில் இணைப்பா.? அமைச்சர் பரபரப்பு பேட்டி.!! - Seithipunal
Seithipunal


சென்னை தலைமை செயலகத்தில் மீன்வள பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியல் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டார். அதன்பிறகு செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர்கள் நாட்டை கொடுத்ததுடன் தானம் கேட்டார், குறட்டை விட்டோரெல்லாம் கோட்டை விட்டவர்கள் என்ற வசனம் திமுகவுக்கு பெரும். இனி கோட்டை திமுகவிற்கு கிடையாது. 

கனிமொழி எடப்பாடியில் இருந்து பரப்புரை செய்தாலும் சரி, இமயமலையில் இருந்து கன்னியாகுமரி வரை சென்றாலும் சரி எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. முக அழகிரி அரசியல் பிரவேசம் கண்டிப்பாக திமுகவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். திமுகவில் முன்னாள் அமைச்சருக்கே பாதுகாப்பு இல்லை.  ஆலடி அருணாவிற்கே இந்த கதி என்றால் சாதாரண திமுக தொண்டர்கள் நிலை என்ன.? என கேள்வி எழுப்பினர். 

7 பேர் விடுதலையில் ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. அமித்ஷா வருகைக்கும் நடந்த அதிமுக மண்டல பொறுப்பாளர் கூட்டத்திற்கும் சம்பந்தம் இல்லை. பாஜக கூட்டணி தொடரும். எங்களை பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர் வேட்பாளர். அதிமுக கூட்டணி கட்சிகளும் கட்டாயமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதல்வராக தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும், சசிகலா குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர், சசிகலாவை அதிமுகவில் சேர வாய்ப்பே இல்லை என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jayakumar press meet about sasikal join to admk


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->