இந்த கட்சிகளுடன் தான் கூட்டணி.. அறிவிப்பை வெளியிட்ட அதிமுக.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனுடைய அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளது. இதனை கூட்டணி கட்சிகள் ஏற்க மறுக்கின்றனர். குறிப்பாக அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜக, அதிமுக கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளரை பாஜக தலைமை தான் அறிவிக்கும் என தொடர்ந்து கூறி வருகின்றனர். இதனால் அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் இடையே சலசலப்பு நிலவி வருகிறது. 

இந்நிலையில், சென்னை சைதாப்பேட்டையில் அம்மா மேனிமினி கிளினிக்கை அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, தேர்தல் தேதி அறிவித்த பிறகு தான் கூட்டணி உறுதி செய்யப்படும். தற்போது பல கட்சிகள் கூட்டணி பேச்சு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும், பாராளுமன்ற தேர்தலின் போது அதிமுக கூட்டணியில் இருந்த காட்சிகள் தற்போது வரை நீடித்து வருவதாகவும் கூறினார். 

மேலும், தேர்தலுக்கான வியூகங்களை அமைத்து வருவதாகவும், யார் யார் எந்தெந்த தொகுதி என்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்த பிறகு அதிமுக தலைமையில் கூட்டணி கட்சிகளுடன் மிகப்பெரிய பொதுக்கூட்டம் நடைபெறும். எந்த கட்சி அதிமுக முதல்வர் வேட்பாளரை ஏற்றுக் கொள்கிறதோ அந்த கட்சிகளுடன் கூட்டணி என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jayakumar press meet about admk candidate and alliance


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->