அழைப்பு விடுத்த சசிகலா.. அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி.!! - Seithipunal
Seithipunal


சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைதண்டனை பெற்ற சசிகலா கடந்த ஜனவரி 27ம் தேதி விடுதலையானார். பெங்களூருவில் இருந்து கடந்த 8ம் தேதி சென்னை திரும்பிய அவர், தி நகரில் உள்ள கிருஷ்ணபிரியா வீட்டில் தொடர் ஓய்வில் இருந்து வருகிறது. சசிகலா தமிழகம் திரும்பியதும் அதிமுக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் சென்று சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரையும் யாரும் சென்று சசிகலாவை நேரில் சந்திக்கவில்லை .

இந்நிலையில், ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு, தி நகரில் சசிகலா தங்கியிருக்கும் இல்லத்தில் ஜெயலலிதாவின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன்பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, பொது மக்களின் வேண்டுதலால் நலன் பெற்றேன் அதற்கு நன்றி.  100 ஆண்டுகளுக்கு நம்முடைய ஆட்சி இருக்க வேண்டும் என்று ஜெயலலிதா கூறிச்சென்றதே நம்முடைய இலக்கு.  

ஜெயலலிதாவின் உண்மையான உடன்பிறப்புகள் அனைவரும் ஒன்றாக இணைந்து சட்டமன்ற தேர்தலை சந்திப்போம். இது நடக்குமென நம்புகிறேன். தொண்டர்களுக்கு நான் என்றும் உண்மையாக துணையாக இருப்பேன். விரைவில் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை சந்திப்பேன் என கூறினார்.

இந்நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம்,  உடன்பிறப்புகள் ஒன்றிணைய வேண்டும் என சசிகலா பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், சசிகலா அதிமுகவினரை அழைக்கவில்லை. அமமுகவினரையே அழைத்துள்ளார். சசிகலாவின் அழைப்பு அமமுகவுக்கு தான் பொருந்தும், அதிமுகவுக்கு அல்ல என கூறினார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jayakumar press about sasikala speech


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->