பொன்.இராதாகிருஷ்ணன் பேச்சிற்கு பதிலடி கொடுத்த ஜெயக்குமார்.. பரபரப்பு பேட்டி.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு பயங்கரவாதிகளின் கூடாரம் என்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா காலத்தில் இருந்தே கூறி வருவதாக பாஜக முன்னாள் மத்திய மந்திரி பொன்.இராதாகிருஷ்ணன் கூறியுள்ளது பெரும் சர்ச்சையாகியுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்கள் டி.ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில், 

இது போன்ற பல குறைகளை செய்வது பொன்.இராதாகிருஷ்ணனுக்கு வாடிக்கையாக உள்ளது. இதனால் இவரது கருத்தினை பெரிதாக எடுப்பதில்லை. போக்குவரத்து துறையை பொறுத்த வரையில் தமிழகம் குறைந்த அளவிலான விபத்துகள் நடைபெற்ற மாநிலமாக மத்திய அரசால் தமிழக அரசு அறிவிக்கப்பட்டு விருது வழங்கப்பட்டுள்ளது. 

இதனைப்போன்று பயங்கரவாத செயலும் ஒதுக்கப்பட்டுள்ள நிலையி, சட்டம் சிறந்த முறையில் செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்கள் சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் வாழக்கூடிய மாநிலமாகவும், மகளிருக்கு முழுமையான பிதுக்கப்பு மற்றும் சாதிய - மத ரீதியிலான மோதல்கள் இல்லாமல் இருக்கிறியாது. சட்டம் ஒழுங்கினை சிறப்பாக காக்கும் மாநிலமாக முதலைச்சர் செயல்பட்டு வருகிறார். 

இவர்களுக்குள் உள்ள அளவுகோலின் படி தமிழகம் அதிக மதிப்பெண் பெற்று சிறந்ததாக விருது வாங்கியுள்ளது. கடந்த 5 வருடமாக பொன்.இராதாகிருஷ்ணன் மத்திய மந்திரியாக பணியாற்றி வந்த நிலையில், அதிகளவிலான திட்டத்தை கொண்டு வந்து இருக்கலாம். ஒரு திட்டம் கூட கொண்டு வராமல் விரக்தியின் உச்சத்தில் உள்ளார். 

அவரது உள்கட்சியில் தலைவார் பதிவிக்காக அவரது கட்சியை மட்டுமே அவர் நாட வேண்டும். திமுக ஆட்சியில் பயங்கரவாதம் எப்படி இருந்தது என்பதை அனைவரும் அறிவார்கள். வடக்கே வாபர் மசூதி பிரச்சனையின் போது கூட, அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதா தலைமையில் எந்த விதமான பிரச்சனையும் ஏற்படாமல் பாதுகாக்கப்பட்டது. 

அதிமுகவின் ஆட்சியில் பயங்கரவாதம் எப்போதும் தலைதூக்காது. பயங்கரவாதத்தினை வேரோடு அகற்றும் ஆட்சியாக அதிமுக திகழும். சமூக விரோதிகள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு தமிழகத்தில் இடம் கிடையாது. இதனை ஊக்குவிக்கும் கட்சியாக திமுக இருந்து வருகிறது. இதனை பொன்.இராதாகிருஷ்ணன் நினைவில் வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jayakumar answer about pon radhakrishanan speech


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->