முதல்வர் நாற்காலி குறித்து பிரபல இசையமைப்பாளர் சர்ச்சை கருத்து.! வகுந்தெடுக்கும் நெட்டிசன்கள்.!  - Seithipunal
Seithipunal


இன்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் புதிய அரசு பதவி ஏற்பு விழா எளிமையான முறையில் நடைபெற்றது. தமிழகத்தின் முதல் அமைச்சராக மு.க ஸ்டாலின் பதவி ஏற்றுக்கொண்டார்.

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் அவருடன் சேர்த்து 34 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்களும் இன்று பதவியேற்றனர். 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் அதிமுக சார்பில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே மணி, கூட்டணி கட்சித் தலைவர்கள், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பங்கேற்றார்.

மேலும், மு.க.ஸ்டாலின் குடும்பத்தினர் அனைவரும் பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர். முதல்வராக பதவியேற்றதும் 5 கோப்புகள் கொண்ட முக்கிய அம்சங்களில் கையெழுத்திட்டார்.

இந்நிலையில், இதுகுறித்து பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், "ரொம்ப நாளைக்குப் பிறகு முதல்வர் நாற்காலிக்குக் கவுரவம், கம்பீரம், கண்ணியம் கிடைத்திருக்கிறது!" என்று ட்வீட் போட்டுள்ளது தற்போது வைரலாகி வருகின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

james vasandhan tweet about CM seat


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->