திமுக தனித்து போட்டி உறுதியானது.! மேடையிலேயே அறிவிப்பு.! மூட்டை., முடிச்சை கட்டும் கூட்டணி கட்சிகள்.! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் தற்போது திமுகவுடன் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் ஆளும் கட்சியான தேசிய காங்கிரஸ் கட்சிக்கும் அதன் கூட்டணி கட்சியான திமுகவுக்கும் இடையே கடும் மோதல்கள் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. 

இதனால் திமுக -காங்கிரஸ் கூட்டணி புதுச்சேரியில் உடையும் என்று அரசியல் வட்டாரங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற புதுச்சேரி தெற்கு மாநில தலைமை கழக அமைப்பாளர் சிவா எம்எல்ஏ பேசியது அமைந்துவிட்டது.

திமுக சிவா எம்எல்ஏ பேசியதாவது, "வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையில்தான் கூட்டணி அமைய உள்ளது. திமுகவிடம் எந்த கட்சி வந்தாலும் திமுகவே தலைமை தாங்கும். முன்பு திமுகவை பற்றி நினைத்துகூட பார்க்காதவர்கள் தற்போது திமுகவிடம் தான் வருகின்றனர்.

கூட்டணிக்காக அண்ணா அறிவாலய கதவை தட்டும் நிலைதான் தற்போது ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். அம்மக்களின் எண்ணப்படி திமுகவும் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது. தமிழகத்தைப் போல புதுச்சேரியிலும் 100% திமுக தலைமையில் தான் ஆட்சி அமையும்" என்று தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், புதுச்சேரியில் திமுக நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிட வேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தி வரும் நிலையில் இந்த கூட்டம் முக்கியத்துவம் வைத்துள்ளதாக அமைந்தது. இந்த முழக்கங்கள் அனைத்தும் திமுக தலைமைக்கு தெரிந்தே நடப்பதால் திமுக-காங்கிரஸ் கூட்டணி உடைவது நிச்சயம் என்கின்றனர்.

புதுச்சேரி தேர்தல் பொறுப்பாளராக உள்ள ஜெகத்ரட்சகன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் அவர் பேசுகையில், "புதுச்சேரியின் அனைத்து தொகுதிகளிலும் திமுக தனித்து போட்டியிடும். 30 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெரும். இல்லை என்றல் நான் மேடையிலேயே தூக்கில் தொங்கிவிடுகிறேன்." என்று ஜெகத்ரட்சகன் அறிவித்துள்ளார்.

ஆக., திமுகவின் கூட்டணி கட்சிகளை கழட்டிவிட்டுவிட்டு, திமுக தனித்து போட்டியிடுவது தற்போது உறுதியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

JAGATHRATCHAGAN SPEECH


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->