மக்கள் வரிப்பணத்தில் வீணாகும் 600 கோடி.! அதிரடியாக மாற்றத்தை கொண்டு வரும் ஜெகன்மோகன்.! - Seithipunal
Seithipunal


ஆந்திர சட்டசபையில் மேல்-சபை உள்ளது இதனால் ஜெகன்மோகன் தலைமைலான அரசு கொண்டு வரும் மசோதாக்களை மேல்- சபையில் எதிர்க்கட்சியினர் தடுப்பதால் மேல்-சபையை கலைக்க முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளார்.

இது குறித்து அவர் ஆந்திர சட்டசபையில் நடந்த சிறப்பு கூட்டத்தில் பேசியதாவது, ஆந்திர மாநிலம் சமமாக வளர்ச்சி பெறுவதற்காக மூன்று தலைநகர் மசோதா மற்றும் சி.ஆர்.டி.ஏ.வை ரத்து செய்ததற்கான மசோதா ஆகியவற்றை அந்த மாநில சட்டசபையில் நிறைவேற்றி மேல்-சபைக்கு அனுப்பப்பட்டது.

ஆனால் அந்த மசோதாக்களை எல்லாம் மேல்-சபை தலைவர் அரீப் நிபந்தனைகளை மீறி தேர்வு கமிட்டியின் பரீசிலைனைக்கு பரிந்துரை செய்கிறார் இதனால் அந்த மசோதாக்கள் நிறைவேற்றப்படாமல் உள்ளது. 

ஆந்திராவில் உள்ள ஏழை குழந்தைகளும் ஆங்கில வழியில் கல்வி படிக்க வேண்டும் என சட்ட மசோதா கொண்டு வந்து அதை சட்டமன்றத்தில் நிறைவேற்றினால் அதை மேல்-சபையில் தடுக்கிறார்கள். ஆனால், மசோதாவை தடுப்பவர்களின் பிள்ளைகள் மட்டும் ஆங்கில வழிக்கல்வி படிக்கலாம்.

மேல்-சபைக்காக ஆண்டுதோறும் 600 கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது. மக்கள் வரிபணத்தில் இருந்து செயல்படும் மேல்-சபை மக்கள் நல திட்டங்களை தடுக்கிறது.

இந்தியாவில் மொத்தமாக 6 மாநிலத்தில் மட்டுமே சட்டமேல்-சபை உள்ளது. ஏற்கனவே நிதி பற்றாக்குறையால் ஆந்திர அரசு தவிக்கும் நிலையில் இந்த சட்ட மேல்-சபை தேவையா? இல்லையா? என்பது குறித்து விவாதம் செய்ய வரும் 27 ஆம் தேதி ஆந்திர சட்டசபையில் சிறப்பு கூட்ட தொடர் நடைபெறும் என ஜெகன் மோகன் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jaganmohan changes in andhra pradesh assembly


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->