ஜெகன் மோகன் ரெட்டி போட்ட உத்தரவு.! வீதியில் நிற்கும் சந்திரபாபு நாயுடு.!! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலம் அமராவதி அருகே கிருஷ்ணா நதி கரையோரம் எட்டு கோடி செலவில் அரசாங்க கட்டிடத்தை முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கட்டினார். இந்த கட்டிடத்தின் அருகில் சந்திரபாபு நாயுடு குடியிருக்க மாளிகை ஒன்று கட்டப்பட்டது. 

இந்த கட்டிடங்கள் விதிகளை மீறி கட்டப்பட்டதாக ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி குற்றச்சாட்டினார். இதனைத் தொடர்ந்து அந்த கட்டிடத்தை  இடிக்க உத்தரவிட்டார். அதன்படி சில நாட்களுக்கு முன்னர் அரசு கட்டிடம் விடுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து சந்திரபாபு நாயுடு தான் குடியிருக்கும் வீட்டில் தொடர்ந்து வசிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். இதனால் ஜெகன்மோகன் ரெட்டி ஏற்கவில்லை. 

இந்நிலையில் சந்திரபாபு நாயுடு தங்கியிருக்கும் பங்களாவில் இருந்து வெளியேறுமாறு அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டி உள்ளன. அந்த கட்டிடம் கிருஷ்ணா நதி கரையில் இருந்து 100 மீட்டர் தூரத்திற்குள் கட்டப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட, சந்திரபாபு நாயுடு தங்கியுள்ள பங்களா உள்ளிட்ட 28 கட்டிடங்களில் இருந்து வெளியேறுபடி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jagan mohan reddy new order


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->