அரசியவாதிகள் நடத்தும் பள்ளிகளுக்கு ஆப்பு வைத்த ஜெகன் மோகன்!! - Seithipunal
Seithipunal


நேற்று ஆந்திர சட்டசபையில், பள்ளி மற்றும் உயர் கல்வியை ஒழுங்கு படுத்தும் சட்ட மசோதா சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஜெகன் மோகன் தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், அரசியல்வாதிகள் நடத்தும் தனியார் பள்ளிகளில் நடைபெறும் கட்டணக் கொள்ளையை தடுக்க இந்த மசோதா பயன்படும் என தெரிவித்தார்.

தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் வசூலிக்கும் கட்டணத்தை உரிய முறையில் முறைப்படுத்தல், கற்பிக்கப்படும் கல்வியின் தரத்தை உயர்த்துதல் போன்றவையே, பள்ளி மற்றும் உயர்கல்வி ஒழுங்கு முறை மசோதாவின் நோக்கம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக தனியாக இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன, அந்தக் குழுக்கள் பள்ளிகளின் நிலை, கல்வியின் தரம் மற்றும் மாணவர்களின் செயல்களைக் கண்காணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான கமிஷன், பள்ளிகளின் கட்டணம் மற்றும் கல்வியின் தரத்தை ஆய்வுசெய்து அளித்த அறிக்கையின் அடிப்படையில் தான் இந்த கல்வி மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜெகன்மோகன்ரெட்டி. இந்த மசோதா குறித்து விரிவாக சட்டமன்றத்தில் பேசிய அவர், சட்டமன்றத்தில் அமர்ந்துள்ள பல எம்.எல்.ஏ-களும் சொந்தமாகப் பள்ளி, கல்லூரிகள் வைத்துள்ளதாக குறிப்பிட்ட ஜெகன் மோகன், அந்த பள்ளிகளில் எல்.கே.ஜி, யூகே.ஜி வகுப்புகளுக்குக் கூட லட்சக்கணக்கில் பணம் வசூலிக்கப்படுவதாகவும், இது போன்ற கல்வி கொள்ளையை தடுக்கவே இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jagan mohan introduce new act for private schools


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->