#BigBreaking : கரூர்., அதிமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் சோதனை.!  போலீசார் குவிப்பு.!  - Seithipunal
Seithipunal


கரூரில், அதிமுக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். 

கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியை கைப்பற்றியது. அதே சமயத்தில் ஆளும் கட்சியாக இருந்த அதிமுகவின் அமைச்சர்கள் பலரும் தோல்வி அடைந்தனர்.

இதில், அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த எம் ஆர் விஜயபாஸ்கர், கரூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 

இந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக வேட்பாளராக களமிறக்கப்பட்ட செந்தில் பாலாஜி, எம் ஆர் விஜயபாஸ்கர் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து வந்தார். அதிலும் குறிப்பாக வருமானத்துக்கு அதிகமாக எம் ஆர் விஜயபாஸ்கர் சொத்து சேர்த்ததாக பல ஆவணங்களை வெளியிட்டு வந்தார்.

இந்த நிலையில், கரூரில் உள்ள முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை செய்து வருகின்றனர். மதுரை, கோவையை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தற்போது இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருவதால் எம் ஆர் விஜயபாஸ்கர் வீட்டின் முன்பு அதிமுக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். அதே சமயத்தில் போலீசாரும் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

it rain in m r vijaya baskar home


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->