#ITRaid: சிக்கியது 175 கோடி., சிக்கலில் அமமுக பிரமுகரின் சகோதரர்.! வெளியான அதிகாரபூர்வ செய்தி.! - Seithipunal
Seithipunal


அமமுக பிரமுகரின் சகோதரருக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற வருமானவரித்துறை சோதனையில் ரூ.175 கோடி அளவில் வருவாய் முறைகேடு நடந்துள்ளதாக வருமான வரித்துறை அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

மதுரை அமமுக பிரமுகர் மகேந்திரன் ஆவார். இவரின் சகோதரர் வெற்றி. இவர் அரசு ஒப்பந்ததாரராக இருந்து வருகிறார். 

மேலும், மதுரையில் உள்ள வெள்ளாகுளம் பகுதியில் உள்ள வெற்றி திரையரங்கமும் நடத்தி வருகிறார். இவர் கட்டுமான நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். 

இந்த நிலையில், வருமானத்தை மறைத்து சொத்து சேர்த்துள்ளதாக இவர் மீது புகார் எழுந்துள்ளது. இந்த தகவலின் பேரில், மதுரை வெற்றி திரையரங்கம், ஐ.வி.எல்.ஆர். கட்டுமான நிறுவனம், தேனி மற்றும் மதுரை மாவட்டத்தில் உள்ள அவர்களுக்கு சொந்தமான பிற நிறுவனங்கள் என 10 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வந்தனர். 

இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.3 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.

இந்நிலையில், இந்த சோதனையில் 'வருமானத்தின் 20 சதவிகிதத்தில் 2 சதவிகிதத்தை மட்டுமே காட்டியுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர். இதன் மூலம் சுமார் 175 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

it raid in madurai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->