#BigBreaking: இரட்டை இலையை முடக்குங்க.. மோடிக்கு ஐடியா தரும் ரவீந்திரன் துரைசாமி... இணையத்தில் வைரலாகும் கடிதம்..!! - Seithipunal
Seithipunal


அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்சனை காரணமாக ஓபிஎஸ் அதிமுக பொதுக்குழுவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதனை எதிர்த்து ஓபிஎஸ் செய்த மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை முடிந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்பொழுது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால் இரட்டை இலை சின்னம் தனக்கு ஒதுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் முறையிட எடப்பாடி பழனிச்சாமி தரப்பு முடிவு செய்துள்ளது. 

இந்த நிலையில் இரட்டை இலை சின்னத்தை முடுக்க வேண்டும் என பிரபல அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கூறப்படும் கடிதம் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அந்த கடிதத்தில் எதிர்வரும் 2024 நாடாளுமன்ற பொது தேர்தலை கருத்தில் கொண்டு இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும். தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக இடையேயான அரசியலை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

ஓ.பன்னீர்செல்வம் பாஜகவை சேர்ந்தவரே அடுத்த பிரதமராக வரவேண்டும் என ஆதரித்துள்ளார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணியினர் பாஜகவுக்கு எதிராக பேசி வருகின்றனர். குறிப்பாக சி.வி சண்முகம், கே.பி முனுசாமி, டி.ஜெயக்குமார், அருள்மொழிதேவன், கோ.ஹரி, ராஜன் செல்லப்பா, செல்லூர் ராஜு ஆகியோர் பாஜகவுக்கு எதிராக பேசிய வருகின்றனர். அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடுக்கப்பட்டால் இபிஎஸ் ஓபிஎஸ் உடன் இணைவார். 

அவ்வாறு இணைந்தால் இரட்டை இலை சின்னத்தை இருவரும் கையாளும் விதமாக அமைந்து விடும். இதனால் எடப்பாடி பழனிச்சாமி பாஜகவுடன் இணைந்த செயல்படுவார். இவர்களால் இரட்டை இலை இல்லாமல் செயல்பட முடியாது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் மூலம் இதை செயல்படுத்துவது தேர்தல் ஆணையத்தின் கையில் உள்ளது. எனவே இரட்டை இலை முடக்குவதன் மூலம் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் என இருவரையும் பாஜக கூட்டணியில் இணைத்து விடலாம். இது போன்ற பல்வேறு யோசனைகளை அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த கடிதம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் விமர்சகர் என்ற போர்வையில் அதிமுகவிற்கு எதிராக ரவீந்திரன் துரைசாமி செயல்படுவதாக அதிமுக தொண்டர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால் இந்த கடிதத்திற்கு ரவீந்திரன் துரைசாமி தரப்பில் இருந்து எவ்வித மறுப்பும் தெரிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் யூடியூப் சேனல் நெறியாளர் ஒருவர் ரவீந்திரன் துரைசாமியின் உதவியாளர் பிரசாந்த் என்பவரிடம் பேசும் ஆடியோ ஒன்று தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த ஆடியோவில் ரவீந்திரன் துரைசாமி பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தை அவரது உதவியாளர் பிரசாந்த் உறுதி செய்தவாறு ஆடியோ வெளியாகி உள்ளது. ரவீந்திரன் துரைசாமியின் கடிதம் மற்றும் அவரது உதவியாளர் பேசிய ஆடியோ தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த இரண்டு விவகாரங்கள் குறித்தும் ரவீந்திரன் துரைசாமி தரப்பில் இருந்து எவ்வித மறுப்பும் தெரிவிக்கப்படவில்லை. இந்த விவகாரம் குறித்து ரவீந்திரன் துரைசாமி தரப்பு விளக்கம் அளித்தால் மட்டுமே அதன் உண்மை தன்மை உறுதி செய்யப்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Is Ravindran Duraisamy asking Modi to freeze AIADMK double leaf


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->