அதிமுக வேட்பாளர் நேர்காணலில் கலந்து கொண்ட பெரிய இடத்து பிள்ளை! வாய்ப்பு கொடுப்பார்களா ஓபிஎஸ் இபிஎஸ்!  - Seithipunal
Seithipunal


50 கார்களில் ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்களோடு அதிமுக அலுவலகத்தில் விருப்பமனு தாக்கல் செய்வதற்கு எம்ஜிஆர் பேரனும், நடிகருமான வி. ராமசந்திரன் சென்றார்  என செய்திகள் வெளியாகியது. அன்று விருப்பமனு தாக்கல் செய்தபோது கூட பெரிதாக தெரியவில்லை. இன்று நேர்காணலுக்கு அவர் வந்தது பலரையும் ஆச்சரியப்படவைத்தது. 

சில தினங்களுக்கு முன் போரூர் அடுத்த  ராமாபுரம் எம் ஜி ஆர் இல்லத்தில் இருந்து ஜீனியர் எம் ஜி ஆர் ராமசந்திரன் விருப்பமனு தாக்கல் செய்ய புறப்பட்டார் எனவும், எம் ஜீ ஆர் சிலைக்கு மாலை அனிவித்த பின் விருப்ப மனு தாக்கல் செய்ய வி. ராமசந்திரன் புறப்பட்டுள்ளார் எனவும் செய்திகள் வெளியாகியது  

ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு விருப்பமனு தாக்கல் செய்ய 50க்கும் மேற்பட்ட கார்களில் ரசிகர்கள் தொண்டர்கள் என பலர் புறப்பட்டனர். எம்.ஜி.ஆரின் மனைவி, ஜானகியின் தம்பி மகள் சுதாவின் மகன் தான் இந்த ஜூனியர் எம் ஜி ஆர்.  எம்ஜி ஆர் மறைவுக்கு ஒரு வருடம் முன்னதாக பிறந்த இவருக்கு ராமசந்திரன் என பெயர் வைத்ததும் எம்ஜிஆர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

அண்ணா உருவாக்கிய திமுகவில், எம்ஜிஆரை வைத்து தலைமைக்கு வந்த கருணாநிதி குடும்பம், மூன்றாவது தலைமுறையாக மற்றவர்களுக்கு சீட் ஒதுக்கும் தலைமையாகவே இருக்கும் நிலையில், அதிமுகவிற்கு மூன்றாவது தலைமையே வந்துவிட்டது. ஆனால் அதிமுகவை உருவாக்கிய எம்.ஜி.ஆரின் பேரன்க்கு தேர்தலில் சீட் கிடைக்குமா என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். சாதாரண தொண்டனை போல சீட் கேட்டு நேர்காணலுக்கு வந்தது ஆச்சரியப்படவைத்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

is MGR Grandson will admk candidate


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->