இரட்டை இல்லை சின்னம் - டிடிவி தினகரன் வழக்கு.! டெல்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.! - Seithipunal
Seithipunal


டிடிவி தினகரன் இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்குத் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றம்சாட்டி தொடரப்பட்ட வழக்கு விசநரனை நடந்து வருகிறது.

ஜெயலலிதா மறைவுக்கு பின் இரு அணிகளாக அதிமுக பிரிந்ததால் இரட்டை இலை சின்னம் தேர்தல் ஆணயத்தால் முடக்கப்பட்டது. ஆர்.கே.நகர் இடைத் தேர்தலின் போது இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி.தினகரன் கைது செய்யப்பட்டார். 

இந்த வழக்கில் டெல்லி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தினகரன் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமினில் தினகரன் வெளியில் வந்தார்.

இந்நிலையில், இரட்டை இலைச் சின்னம் பெற லஞ்சம்  தேர்தல் ஆணையத்திற்கு, அதிமுக லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு தடை கோரிய மனு மார்ச் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

irattai ilai sinnam case


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->