ப.சிதம்பரத்தினை கைது செய்ய தடை! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!  - Seithipunal
Seithipunal


ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்திற்கு எதிராக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், இந்த வழக்கில் ப.சிதம்பரத்தினை கைது செய்ய, செப்டம்பர் 5 ஆம் தேதி வரை தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மேலும் இந்த வழக்கு தொடர்பாக  செப்டம்பர் 5ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. முன்னதாக ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கில் சிபிஐ அவரை கைது செய்து காவலில் எடுத்து விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. 21 ஆம் தேதி இரவு கைது செய்யப்பட்ட சிதம்பரத்தினை, சிபிஐ முதலில் 22 ஆம் தேதி முதல் 26ம் வரை 5 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்தது. 

பின்னர் மேலும் 5 நாட்கள் அவரை விசாரணை செய்வதற்காக நீதிமன்ற காவலில் சிபிஐ எடுத்த நிலையில்,  30 ஆம் தேதி வரை அவருடைய சிபிஐ காவல் முடிவடைகிறது. இந்த நிலையில் அவரை அமலாக்கத்துறை செப்டம்பர் 5ம் தேதி வரை கைது செய்யக்கூடாது என டெல்லி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ காவலில் வைக்குமாறு விசாரணை நீதிமன்றத்தின் ஆகஸ்ட் 22 ஆம் தேதி உத்தரவை எதிர்த்து ப.சிதம்பரத்தின் மனு செப்டம்பர் 2-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Interim protection granted by the Court to P Chidambaram in ED case


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->