இந்தியாவின் முதல் குடிமகன், குடியரசு தலைவர் தமிழில் ட்வீட்.!! கொண்டாட்டத்தில் தமிழ் இன மக்கள்.!!! - Seithipunal
Seithipunal


இன்று தமிழ் புத்தாண்டு உலகம் முழுவதும் வாழும் தமிழ் இன மக்களால் விடப்பட்டு வருகிறது. இன்ற தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அரசியல் காட்சி தலைவர்கள் முதல், நடிகர்கள் கிரிக்கெட் வீரர்கள் வரை தமிழ் இன மக்களுக்கு தங்களின் வாழ்த்து செய்தியை தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்திலும் தமிழ் புத்தாண்டு வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் பழனிச்சாமி அவர்களும் தமிழ் இன மக்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இதேபோல், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். 


இந்தியாவின் முதல் குடிமகன், இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ''நம் தமிழ்நாட்டில் உள்ள சகோதர சகோதரிகள் மற்றும் உலகில் உள்ள அனைத்து தமிழ் உறவுகளுக்கும் என்னுடைய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். பிறக்கக்கூடிய இந்த வருடம் எல்லோர் வாழ்விலும்மகிழ்ச்சியும், இன்பமும் மற்றும் செழிப்பும் வழங்கிட வேண்டிக் கொள்கிறேன்'' என்று தமிழில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.மேலும், இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், ''தமிழ் சகோதரர்களுக்கும், சகோதரிகளுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். வரும் ஆண்டில் உங்கள் ஆசைகள் நிறைவேறட்டும். அனைவரின் வாழ்விலும் ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் பெருகட்டும்'' என்று தெரிவித்துள்ளார். 

English Summary

INDIAN PRESIDENT WISH TO TAMIL PEOPLE


கருத்துக் கணிப்பு

துரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருப்பது
கருத்துக் கணிப்பு

துரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருப்பது
Seithipunal