இந்தியா இந்து நாடு: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சர்ச்சை பேச்சு!
India Hindu Muslim Christian RSS mohan Bhagwat
ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பகவத், "இந்தியா ஒரு இந்து நாடு" என்றும், "நாட்டில் உள்ள முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் இந்து மூதாதையர்களின் சந்ததியினர்" என்றும் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பேசிய மோகன் பகவத், இந்து சமுதாயம் பற்றிய தனது கருத்துக்களை முன்வைத்தார்.
அவர் பேசுகையில், "பண்டைய காலத்தில் இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்டவர்கள், இந்த மண்ணில் வாழும் மக்களைக் குறிக்கவே இந்து என்ற வார்த்தையைப் பயன்படுத்தினர்" என்று தெரிவித்தார். மேலும், அவர் இந்து சமூகத்தை நான்கு வகைகளாகப் பிரித்தார்:
இந்துவாக இருப்பதில் பெருமை கொள்பவர்கள்.
இந்து என்பதை ஒப்புக்கொள்பவர்கள், ஆனால் பெருமைப்படாதவர்கள்.
தனிப்பட்ட முறையில் இந்துவாகக் கருதினாலும், வெளிப்படையாக அடையாளம் காட்டிக்கொள்ளாதவர்கள்.
தாங்கள் இந்துக்கள் என்பதை மறந்துவிட்டவர்கள்.
மோகன் பகவத் தொடர்ந்து பேசுகையில், "இந்தியா ஒரு இந்து நாடு. இங்குள்ள முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் ஒரே மூதாதையர்களின் சந்ததியினர் தான். எனவே, இந்து சமூகம் ஒன்றுபட்ட சக்தியாகத் திரள வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
English Summary
India Hindu Muslim Christian RSS mohan Bhagwat