பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை இல்லையா?.! ஆளுநரின் அதிர்ச்சி முடிவு?..!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் முன்னாள் பிரதமரான ராஜீவ் காந்தியை கொலை செய்த வழக்கில் கடந்த 28 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி., முருகன்., சாந்தன்., பேரறிவாளன்., ராபர்ட் பயஸ்., ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோரை நல்லிணக்க அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்ய முடிவு செய்யப்பட்டது. 

இந்த முடிவின் படி தமிழக அரசு கடந்த 2014 ஆம் ஆண்டு இதற்கான தீர்மானத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றியது. இந்த தருணத்தில்., தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றம் செய்யப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரணை செய்த உச்சநீதிமன்றம் இவர்களின் விடுதலை குறித்த முடிவை தமிழக அரசு எடுக்கலாம் என்று தெரிவித்திருந்தது. 

7 பேர் விடுதலை,

இந்த சமயத்தில்., இவர்கள் ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அமைச்சரவையின் சார்பாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு தமிழக ஆளுநருக்கு இந்த தீர்மானம் அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த 2014 ஆம் வருடத்தின் செப்டம்பர் மாதத்தில் இது குறித்த தீர்மானத்தை தமிழக அமைச்சரவை தீர்மானம் செய்து நிறைவேற்றி அனுப்பிய நிலையில்., ஆளுநர் தற்போது வரை இது குறித்து எந்த ஒரு முடிவையும் எடுக்காமல் இருந்து வந்தார். 

மேலும்., பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய தமிழக ஆளுநர் மருத்ததாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த விஷயம் தொடர்பான தனது முடிவை முதலமைச்சர் பழனிசாமியிடம் அதிகாரபூர்வமற்ற முறையில் ஆளுநர் பன்வாரிலால் ஏற்கனவே கூறி விட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரை தொடர்பாக அரசுக்கு ஆளுநர் எழுத்து பூர்வமாக எந்த விதமான பதிலும் தற்போது வரை அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

including perarivalan and 7 members could not released


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->