பள்ளி வேலை நேரத்தில் திருமணத்திற்கு சென்ற ஆசிரியர்கள்! திடீர் ஆய்வு மேற்கொண்ட கல்வி அலுவலர்! பாய்ந்தது 17(பி)!! - Seithipunal
Seithipunal


வேலை நேரத்தில் திருமண நிகழ்வில் பங்கேற்கச் சென்ற ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பள்ளி வேலை நேரத்தில் திருமண நிகழ்வில் பங்கேற்கச் சென்ற பள்ளித் தலைமையாசிரியர் , 7 ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளார். 

கிருஷ்ணகிரி, ஒசூர் கல்வி மாவட்டத்துக்கு உள்பட்ட ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் கடந்த ஆண்டு +2 பொதுத் தேர்வில் ஒருவர் கூட தேர்ச்சி பெறாத நிலையில், ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி, இந்தப் பள்ளிக்கு திடீர் ஆய்வு மேற்கொண்ட போது, அவர் அதிர்ச்சி அடைந்தார்.  ஏனென்றால் அவர் ஆய்வு செய்யும் போது,  அப்போது, பள்ளியின் தலைமையாசிரியர் குபேந்திரன் உள்பட 7 ஆசிரியர்கள் பணியில் இல்லை. ஆனால்  பள்ளி வருகைப் பதிவேட்டில் கையொப்பம் இட்டுள்ளனர். இது குறித்து விசாரித்த போது, பெங்களூரில் நடைபெற்ற திருமண நிகழ்வில் ஆசிரியர்கள் பங்கேற்கச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, பள்ளி வேலை நேரத்தில் திருமண நிகழ்வுக்குச் சென்றவர்கள் மீது 17(பி) என்ற பிரிவின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி உத்தரவிட்டார். இந்த சம்பவம் பள்ளி கல்வித் துறை மற்றும் ஆசிரியரிடையே   பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English Summary

Including Headmaster And Teacher Going To Marriage


கருத்துக் கணிப்பு

கர்நாடக காவேரியில் தண்ணீர் திறப்பதன் காரணம்?
கருத்துக் கணிப்பு

கர்நாடக காவேரியில் தண்ணீர் திறப்பதன் காரணம்?
Seithipunal