உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்க சுவிச்சர்லாந்து பறந்த முதல்வர்... முதலீடுகளை ஈர்த்து வரத்திட்டம்.!! - Seithipunal
Seithipunal


கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக 6 நாள் சுற்றுப்பயணமாக சுவிட்சர்லாந்துக்கு புறப்பட்டு நேற்று சென்றுள்ளார். 

இதற்கு முன்னதாக மத்திய மந்திரிசபை விரிவாக்கம் குறித்து அமித்ஷாவுடன் ஆலோசனையும் மேற்கொண்டுள்ளார். சுவிட்சர்லாந்து நாட்டில் உலக பொருளாதார மாநாடு நாளை தொடங்கி 4 நாட்கள் நடைபெற உள்ளது. 

இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்கு கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சர் எடியூரப்பா 6 நாள் சுற்றுப்பயணமாக புறப்பட்டுள்ளார். நேற்று காலை பெங்களூரில் இருக்கும் சர்வதேச விமான நிலையம் மூலம் அவர் புறப்பட்டுச் சென்றுள்ளார். 

பின்னர் துபாய்க்குச் சென்று அங்கிருந்து மற்றொரு விமானம் மூலமாக சுவிச்சர்லாந்து செல்கிறார். தொழில்துறை மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர், தலைமைச்செயலாளர் விஜயபாஸ்கர், தொழில்துறை முதன்மை செயலாளர், முதல் மந்திரியின் செயலாளர் செல்வகுமார் உட்பட அதிகாரிகள் குழுவினரும் சென்றுள்ளனர். 

இதற்கு முன்னதாக பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறிய சமயத்தில், சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள தாவுஸ் நகரில் நடைபெறும் உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்க செல்கிறேன் என்றும், இங்கு தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து விவாதிக்க உள்ளதாகவும், இதன் மூலமாக கர்நாடக மாநிலத்திற்கு அதிக முதலீடு ஈர்க்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார். 

மேலும், கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் குறித்து அமித்ஷாவுடன் அரை மணி நேரம் ஆலோசனை நடத்தினேன். இந்த ஆலோசனையின் போது அமித்ஷா சாதகமான பதிலை கூறியுள்ளதாகவும், வெளிநாட்டு பயணத்தை முடித்துவிட்டு கர்நாடகத்திற்கு திரும்பியதும் ஓரிரு நாட்களில் மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in switzerland world economic forum meeting yeddyurappa went


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->