சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான தினகரன்.! - Seithipunal
Seithipunal


அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் கடந்த வருடம் கரூரில் பொதுக்கூட்டமானது நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் துணை பொதுச்செயலாளரான டி.டி.வி.தினகரன் பேசுகையில்., "மத்திய அரசாங்கத்தின் கைப்பாவையாக தமிழக அரசானது செயல்பட்டு மக்களை ஏமாற்றி வருகிறது" என்று பேசினார். 

இந்த பேச்சை கடுமையாக கண்டித்த அதிமுக கட்சியினர்., தமிழக முதலைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் நற்பெயருக்கு கழகம் ஏற்படுத்தும் விதமான பேச்சை பேசியதன் காரணமாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இதனை தொடர்ந்து டி.டி.வி.தினகரன் மீது தமிழக அரசின் சார்பாக கடந்த செப். 19 ம் தேதியன்று கிரிமினல் வழக்கானது பதிவு செய்யப்பட்டது. 

இந்த விஷயம் குறித்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் கடந்த அக். 3 ம் தேதியன்று எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது உள்ள மனுக்கள் குறித்து விசாரணை செய்ய சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றியமைத்தது. 

இந்த வழக்கானது சிறப்பு நீதிபதி ஜெ.சாந்தி அவர்கள் முன்பு இன்று விசாரணைக்கு வந்த நிலையில்., டி.டிவி.தினகரன் நேரில் ஆஜரான பின்னர் அவரிடம் வழக்கிற்கான நகல் வழங்கப்பட்டது.  

இதனை தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை வரும் பிப்ரவரி மாதம் 4 தேதியன்று தள்ளிவைத்து உத்தரவிட்டார். இந்த வழக்கு விசாரணைக்கு டி.டி.வி.தினகரன் நேரில் ஆஜரானதை தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சார்ந்த தொடர்கள் அதிகளவு குவிந்த காரணத்தால்., காவல் துறையினர் பாதுகாப்பானது பலப்படுத்தப்பட்டு இருந்தது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in karur special court ttv dinakaran assemble due to case


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->