முதலமைச்சரை பாராட்டி ட்விட் போட்ட காங்கிரஸ் தலைவர்.. ட்விட்டர் களத்தில் மோதிக்கொண்ட சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


டெல்லி மாநிலத்தில் தற்போது நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியானது அமோக வெற்றிபெற்று, மீண்டும் மூன்றாவது முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். 

இந்த தருணத்தில், காங்கிரஸ் கட்சியை சார்ந்த முன்னாள் மத்திய மந்திரியான மிலிந்த் தியோரா தனது ட்விட்டர் வலைப்பக்கத்தில், டெல்லி அரசானது அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் இயங்கி தனது வருவாயை ரூ.60 ஆயிரம் கோடியாக இரட்டிப்பாக்கியுள்ளது. மேலும், கடந்த 5 வருடங்களில் உபரி வருவாயையும் பராமரித்துள்ளது என்று பாராட்டியுள்ளார். 

இந்த கருத்தினை கவனித்த காங்கிரஸ் கட்சியினர் பெரும் கொந்தளிப்பிற்கு உள்ளாகி எதிர்ப்பை தெரிவிக்கவே, டெல்லி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தாய்வார் அஜய் மக்கான் தனது ட்விட்டர் பக்கத்தில், "நீங்கள் காங்கிரசில் இருந்து வெளியேற விரும்பினால் தாராளமாக வெளியேறலாம்" என்று தெரிவித்துள்ளார். 

இந்த பதிவினை கண்ட மிலிந்த், " டெல்லியின் முதலமைச்சராக பணியாற்றி வந்த ஷீலா தீட்ஷத்தின் செயலை நான் எப்போதும் குறைத்து மதிப்பிட வில்லை. இவரின் சாதனையை முன்வைத்திருந்தால் காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருக்கலாம் என்று கூறியுள்ளார். 

மேலும், நிர்வாகத்தை சரியாக பரிமாறித்து வந்த நபரை பாராட்டியதற்கு உட்கட்சியில் இருபெரும் தலைவர்கள் மோதிக்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in delhi congress ex mp speech about arvind kejriwal


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->