காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானியர்களுக்கு அதிரடி கட்டளை விடுத்த இம்ரான்கான்! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பேசியதாவது, இந்திய அரசு தற்போது காஷ்மீரில் போடப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை விலக்கிக்கொள்வதுடன், 370-வது சட்டப்பிரிவை ரத்துசெய்யும் முடிவையும் அவர்கள் திரும்பப்பெறாவிட்டால் இனி இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தமாட்டோம் என்றார். 

இதுவரையில் இல்லாத அளவு காஷ்மீர் பிரச்சினையை மிக  உறுதியுடன் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் எடுத்து வைக்க உள்ளேன். பாகிஸ்தானிலிருந்து யாராவது ஜிகாத் போராட்டத்துக்காக காஷ்மீருக்கு சென்றால், காஷ்மீர் மக்களுக்கு அநீதி இழைக்கும் முதல் நபராக நான் ஆகிவிடுவேன். மேலும், காஷ்மீர் வாழ்ந்து வரும் மக்களின் எதிரியாகவும் நான் ஆகிவிடுவேன். 

காஷ்மீர் மக்களை படைகளால் முற்றுகையிட்டு தாக்குவதற்க்காக இந்தியா அம்மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்தார். அமெரிக்கா அதிபர் டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்தவும், நடைபெறவுள்ள ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க உள்ள இம்ரான்கான் இவ்வாறு பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

imran khan request to pakistan peoples


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->