அதிமுகவில் குழப்பம் ஒன்று கூடிய நிர்வாகிகள்.! வெளியாகவுள்ள அறிவிப்புகள்.! - Seithipunal
Seithipunal


அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் யார்? என கடந்த ஒரு வாரமாக சர்ச்சை எழுந்து வருகிறது. சட்டமன்ற தேர்தல் முடிந்தவுடன்  எம்எல்ஏக்கள் கூடி முதலமைச்சரை முடிவு செய்வோம் என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்திருந்தார். 

இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி தான் 2021 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலின் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி  ட்வீட் செய்திருந்தார். இது அதிமுகவில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. அமைச்சர்கள் பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை கூறி வந்தனர்.

இதையடுத்து, நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து அமைச்சர்கள் யாரும் கருத்து தெரிவிக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார்.

இந்த நிலையில், முதலமைச்சர் வேட்பாளர் குறித்து அதிமுகவில் ஏற்பட்டுள்ள குழப்பம் தொடர்பாக இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக  சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி வைத்திலிங்கம் மற்றும் மனோஜ் பாண்டியன், அமைச்சர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில் சில முக்கிய முடிவுகள் அறிவிக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

importent meeting in admk head office


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->