சசிகலாவின் தமிழக வருகை., பாஜகவின் மூத்த தலைவர் பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகால சிறைத் தண்டனை முடிந்து தமிழகம் வந்த சசிகலாவிற்கு அவரின் ஆதரவாளர்களும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த தொண்டர்களும் பலத்த வரவேற்பை அளித்தனர்.

சசிகலா கர்நாடக எல்லையில் இருந்து தமிழகத்தின் தலைநகர் சென்னை வரும் வரை அவருக்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. இதற்காக சுமார் 200 கோடி ரூபாய் செலவு செய்ததாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை உண்டாக்கின.

இந்நிலையில், தமிழக மக்கள் சசிகலாவை பெரிதும் வரவேற்கவில்லை, அவரின் ஆதரவாளர்களும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே வரவேற்று உள்ளனர் என்று, பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான இல கணேசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது,

"தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் ஆங்கிலம் கலக்காமல் தமிழ் மொழியைப் கோப்புகளில் பயன்படுத்த வேண்டும் என்று, தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இதற்காக நான் தமிழக அரசை மனதார பாராட்டுகிறேன். தாய்மொழி தினமான இன்று தாய்மொழி தமிழில் பேசுவதையும் தமிழர்கள் அனைவரும் தங்களது தாய்மொழியான தமிழில் கையொப்பம் இடுவதையும் இன்று உறுதி ஏற்போம்.

அதிமுக - பாஜக கூட்டணி உறுதி என்பதை தெளிவுபடுத்துவதற்காகவே பிரதமர் மோடி அவர்கள், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கையையும், துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் கையையும் ஓங்கி தூக்கி பிடித்துள்ளார்,

சசிகலாவுக்கு தமிழக மக்கள் வரவேற்பு அளிக்கவில்லை. சசிகலாவிற்கு அவரின் ஆதரவாளர்களும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த தொண்டர்களும் தன வரவேற்பு அளித்துள்ளனர். அதிமுக - அமமுக விவகாரம் குறித்து மற்ற கட்சிகள் கருத்து தெரிவிக்க முடியாது." என்று இல கணேசன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ILA CANESAN say about sasikala tn


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->