ஒரே தொகுதியில் போட்டியிட துடிக்கும் கணவன்-மனைவி.. திணறும் பாஜக.!! - Seithipunal
Seithipunal


உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தயாராகி வருகிறது. மேலும்,வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டு வருகின்றனர். இதனிடையே கடந்த 15ஆம் தேதியன்று 107 வேட்பாளர்களை கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது. இன்று 85 வேட்பாளர் கொண்ட இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. 

இந்நிலையில், சரோஜினி நகர் தொகுதியில் போட்டியிட தற்போதைய எம்எல்ஏவாக இருக்கும் ஸ்வாதி சிங்கும், அவரது கணவர் தயா சங்கர் சிங்கும் ஒரே நேரத்தில் விருப்பம் தெரிவித்துள்ளனர். கடந்த 2017 ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து விலகி,  பாஜகவில் இருவரும் இணைந்தனர். ஸ்வாதி சிங் அமைச்சராக உள்ளார். 

தற்போது, கணவர்-மனைவி இடையே நிலவும் பிரச்சனையால், இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சரோஜினி நகர் தொகுதியில் யார் போட்டியிடுவது என்பது குறித்து பாஜக இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால், அமைச்சர் ஸ்வாதி சிங் அந்த தொகுதியில் பிரச்சாரத்திற்கான பேனர்களை தயார் செய்து வைத்துள்ளார். ஆனால், அவரது கணவரோ போட்டியிடுவதில் இருந்து பின்வாங்க மறுத்துள்ளார். 

கடந்த முறை நான் அவளை போட்டியிட செய்தேன். இந்த முறை நான் போட்டியிடுகிறேன் என தயா சங்கர் சிங் தெரிவித்துள்ளார். ஒரே தொகுதியை இருவரும் கேட்பதால், பாஜக குழப்பத்தில் உள்ளது. இதனிடையே, கணக்கெடுப்பு முடிவின் அடிப்படையில் தேர்தலில் போட்டியிட ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என உத்தரப் பிரதேச பாஜக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

husband and wife same seat in bjp


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->