வைகோ வார்த்தைகளை அளந்து பேச வேண்டும்!! ஹெச். ராஜா அதிரடியால்., ஆத்திரத்தில் மதிமுகவினர்!! - Seithipunal
Seithipunal


நாமக்கல் திருமணம் ஒன்றில் கலந்து கொண்ட பாஜக எச்.ராஜா, வைகோவிற்கு நாவடக்கம் தேவை என கூறியது மதிமுகவினர் இடையே அதிர்வை ஏற்படுத்தி உள்ளது.

பாஜக தேசிய செயலாளர், ஹெச். ராஜா அவர்கள், நேற்று (டிசம்பர் 3) நாமக்கல்லில் திருமணவிழா ஒன்றில் கலந்து கொள்ள வந்தார். அப்போது, திருமணம் முடிந்து செய்தியாளர்களை சந்தித்த எச்.ராஜா அவர்கள், செய்தியாளர்களிடம், ' மதிமுக தலைவர் வைகோ அவர்களுக்கு நாவடக்கம் தேவை என்றும், வார்த்தைகளை கையாளுவதில் வைகோவிற்கு கவனம் தேவை என்றும், அவர் வார்த்தைகளை அளந்து பேச வேண்டும், என்றும் கூறினார். 

மேலும், நடிகர் கமல் பற்றி,' 67 ஆண்டுகள் பணம் சம்பாதிப்பதிலும், வாழ்வின் சுக போகங்களை அனுபவிப்பதிலும் செலவழித்த கமல் மத்திய அரசாங்கம் குறித்து கஜாபுயல் விடயங்களில் விவசாயிகளை வஞ்சிக்கிறது என கூற தகுதியற்றவர் எனவும், அவர் தமிழக நலன் குறித்து பேசுவதில் என்ன அர்த்தம் உள்ளது?' என்றும் கேள்வி எழுப்பினார்.

English Summary

h.raja said,'vaiko should be silent '


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal