தமிழுக்கு முதல் எதிரி திராவிடம் தான்.. திராவிடத்தை அழிக்காவிட்டால்... எச். ராஜாவின் அடுத்த சர்ச்சை..!! - Seithipunal
Seithipunal


பாரதிய ஜனதா கட்சி தேசிய செயற்குழு உறுப்பினரும் மூத்த தலைவருமான எச். ராஜா இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது "பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழை தேடி யாத்திரை மேற்கொள்ள உள்ளார். தமிழைத் தேடி யாத்திரை மேற்கொள்ள உள்ளார் என்றால் தமிழ் தொலைந்து விட்டது என்று அர்த்தம். 

திராவிடத்தை அழிக்காவிட்டால் தமிழை காப்பாற்ற முடியாது. தமிழுக்கு முதல் எதிரியே திராவிடம் தான். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் என்று அறிவித்ததும் எதிர்க்கட்சி வெற்றி பெற்று விடும் என்ற நம்பிக்கை வந்து விட்டது. தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் மாதம் ஒருமுறை செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக அறிவித்து இருந்தது. ஆனால் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அதற்கு வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார். 

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துவோம் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தனர். ஆனால் நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அதற்கு சாத்தியம் இல்லை என தெரிவித்துள்ளார். திமுகவின் தேர்தல் அறிக்கைகளை நிறைவேற்ற முடியாது என திமுக அமைச்சர்களே ஒப்பு கொண்டுள்ளனர்.

இதனால் மக்கள் திமுகவை திரும்பி கூட பார்க்க மாட்டார்கள். காங்கிரசுக்கு கமல்ஹாசன் ஆதரவு தருவது குழப்பத்தை தான் தரும். ஜீரோ பிளஸ் ஜீரோ, ஜீரோ தான் என்ற கணித முறைப்படி கமலஹாசனின் ஆதரவு அமையும்" என செய்தியாளர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார். திராவிடத்தை அழிக்க வேண்டும் என ஹச். ராஜா பேசியது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

HRaja opined that Dravidians are the first enemy of Tamil


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->