அத்தியாவசிய பொருட்களின் விலை உயருகிறது.! வெளியான பட்ஜெட் தாக்களின் உயர்த்தப்பட்ட வரிகள்.!!  - Seithipunal
Seithipunal


பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெற்று முடிந்து பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான கட்சி மத்தியில் ஆட்சியமைத்து உள்ள நிலையில்., 2019 - 2020 நிதி ஆண்டிற்கான பட்ஜெட் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களால் இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் தாக்களில் கூறப்பட்ட வரி குறித்த விபரங்கள் பின்வருமாறு: 

வீட்டு கடனுக்கான வரி விலக்கில் கூடுதலாக ரூ.1.5 லட்சம் கோரலாம்., குறைந்த பட்ஜெட் வீடு வாங்குபவர்களுக்கு மேலும் ரூ.1.5 லட்சம் வரிச்சலுகை ., வீடு வாடகைக்கு விடுதல் தொடர்பான சட்டங்கள் காலாவதி ஆகிவிட்ட நிலையில் மாற்றியமைக்கப்படும்.

road, roadway transport, highway

பாரத்மாலா திட்டத்தின் 2ஆவது கட்டத்தில், மாநில நெடுஞ்சாலைகளை மேம்படுத்த உதவிகள் வழங்கப்படும்., உள்கட்டமைப்பு துறையில், கடன் பத்திரங்களில் அன்னிய நேரடி முதலீடு, அன்னிய நிறுவன முதலீடு அனுமதிக்கப்படும்.

கடந்த சில ஆண்டுகளாக நேரடி வரி வருவாய் அதிகரித்து வருகிறது., நேரடி வரி வருவாய் சுமார் 78 விழுக்காடு அளவிற்கு அதிகரித்துள்ளது., 2013-2014 ஐ ஒப்பிடும் போது மத்திய அரசின் வரி வருவாய் 78 சதவீதம் உயர்ந்துள்ளது.

Tamil online news Today News in Tamil

நேரடி வரி வருவாய் 11.37 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது., வளர்ச்சியை முன்னோக்கி கொண்டு செல்லும் வகையில் வரி விகிதங்கள் அறிவிக்கப்படும்., 400 கோடி ரூபாய் வரை ஆண்டு வருமானம் கொண்ட நிறுவனங்களுக்கு 25 சதவீதம் வரி.

income tax

5 லட்சம் ரூபாய்க்கு குறைவான ஆண்டு வருமானம் உள்ளவர்கள் வருமான வரி செலுத்த தேவையில்லை., மின்சார வாகன கடனுக்கான வட்டியில் வருமான வரி விலக்கு., ஸ்டார்ட் அப் நிறுவனங்களை இனி வருமான வரித்துறை விசாரணைக்கு உட்படுத்தப்படுத்தமாட்டார்கள்.

இந்தியா விண்வெளித்துறை வல்லரசாக உயர்ந்துள்ளது., பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையத்தின் கீழ் சமூக பங்குச்சந்தை ஏற்படுத்தப்படும்., இன்சூரன்ஸ் இன்டர்மீடியரி எனப்படும் காப்பீட்டு இடை நிறுவனங்களில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படும்.

வேளாண்துறை சார்ந்த கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும்., பிரதமர் கிராமீன் ஆவாஜ் திட்டத்தின் கீழ், ஊரகப் பகுதிகளில் 2021ஆம் ஆண்டுக்குள் 1.95 கோடி வீடுகள் கட்டப்படும்., ஊரகப் பகுதிகளில் அனைத்து வீடுகளுக்கும் தண்ணீர் வழங்க திட்டம்.

train, indian railways,

ரயில்வே உள்கட்டமைப்பு துறையில் 2018 முதல் 2030 வரை 50 லட்சம் கோடி ரூபாய் தேவை., ரயில்வேயில் பயணிகள் மற்றும் சரக்கு சேவையை மேம்படுத்த அரசு-தனியார் கூட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

ஜிஎஸ்டி பதிவு சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு 2 சதவீத வட்டி மானியத்திற்கு ரூ.350 கோடி ஒதுக்கீடு., கிராமங்கள், ஏழைகள், விவசாயிகளை மையமாகக் கொண்டு மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறது.

Tamil online news Today News in Tamil

பிரதமர் கிராம் சதக் திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளில் 1.25 லட்சம் கி.மீ. சாலைகள் உருவாக்கப்படும்-மேம்படுத்தப்படும்., 80 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்., பெண்களின் பங்களிப்பு மூலமே நாட்டில் முன்னேற்றத்தை உருவாக்க முடியும்.

அனைவருக்கும் குடிநீர் வழங்குவதற்கு முன்னுரிமை கொடுத்து மத்திய அரசு செயல்பட்டு வருகிறது., ஊரகப் பகுதிகளில் 2 கோடிக்கும் மேற்பட்டோர் டிஜிட்டல் கல்வியறிவு பெற்றவர்களாக மாற்றப்பட்டுள்ளனர்., இதுவரை 9.6 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன.

toilet, indian toilet, toilet project

5.6 லட்சம் கிராமங்கள், திறந்தவெளி கழிப்புமுறை ஒழிக்கப்பட்டவையாக மாறியுள்ளன., ஒவ்வொரு கிராமத்திலும் திடக் கழிவு மேலாண்மைக்கு, தூய்மை இந்தியா திட்டம் விரிவுபடுத்தப்படும்., காந்திய கொள்கைகளை இளைஞர்களிடம் கொண்டு செல்ல காந்திபீடியா உருவாக்கப்பட்டு வருகிறது.

விவசாயிகள் மத்தியில் "ஜீரோ பட்ஜெட் விவசாயம்" என்ற முறை ஊக்குவிக்கப்படும்., இந்தியாவில் ஆராய்ச்சிகளுக்கு நிதியளித்து, ஒருங்கிணைக்க தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை உருவாக்கப்படும்., இந்தியா விரைவில் உயர்கல்விக்கான மையமாக மாறும்.

Tamil online news Today News in Tamil

வெளிநாட்டு மாணவர்களையும் ஈர்க்கும் வகையில், "இந்தியாவில் படியுங்கள்" திட்டம் முன்னெடுக்கப்படும்., 2022ஆம் ஆண்டுக்குள் அனைத்து ஊரக வீடுகளுக்கும் மின்சாரமும், எரிவாயு இணைப்பும் வழங்கப்பட்டு விடும்.

electricity, free electricity, white bulb

வீட்டுவசதி கடன்துறையை ஒழுங்குபடுத்தும் அதிகாரம், தேசிய வீட்டுவசதி வாரியத்திடமிருந்து ரிசர்வ் வங்கிக்கு மாற்றம்., புதிய 20 ரூபாய் நாணயங்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்., வருமான வரி தாக்கலுக்கு, பான் எண் இல்லாதவர்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தலாம்.

2019 அக்டோபர் 2ஆம் தேதிக்குள் இந்தியாவில் திறந்தவெளி கழிப்பு முறை முற்றாக ஒழிக்கப்படும்., வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் ஆதார் எண் வழங்க திட்டம்
என்ஆர்ஐ.கள் இந்தியா வந்த பிறகு 180 நாட்கள் காத்திருக்க தேவையின்றியே ஆதார் எண்.

உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 35 கோடி எல்இடி பல்புகள் விநியோகிக்கப்பட்டுள்ளன., இதன் மூலம் ஆண்டுக்கு 18,341 கோடி ரூபாய் சேமிக்கப்படுகிறது., வர்த்தக வங்கிகளின் வாராக்கடன் அளவு ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கடந்த ஆண்டில் குறைக்கப்பட்டுள்ளது.

bank

புதிய திவால் சட்டத்தின் கீழ், கடந்த 4 ஆண்டுகளில் 4 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வாராக்கடன் மீட்கப்பட்டுள்ளது., ஒருங்கிணைப்பு மூலம் பொதுத்துறை வங்களின் எண்ணிக்கை 8 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கு மேல் வங்கியிலிருந்து ரொக்கமாக எடுத்தால் 2 சதவீதம் வரி விதிக்கப்படும்., தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த உலோகங்களுக்கான இறக்குமதி வரி 10 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்வு.

எரிபொருள் மீதான கலால் வரி ரூ.1 உயர்வு., பாதுகாப்புத்துறை தொடர்பான தளவாடங்களுக்கு இறக்குமதி வரியில் இருந்து விலக்கு., மின்சார வாகனங்களுக்கு இறக்குமதி வரியில் இருந்து விலக்கு., வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் புத்தகங்களுக்கு 5 சதவீத வரி ஆகியவையாகும். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how budget is affect taxes all taxes increase in new budget


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->