பாமக அதிமுக கூட்டணி முடிவான வேளையில், நிறைவேறிய ஸ்டாலின் திட்டம்! வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு! திமுகவிற்கு மகிழ்ச்சி!  - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர்நது தொடங்கிய அன்று ஓசூர் தொகுதி காலியானதாக அறிவிக்கக்கோரி எதிர்க்கட்சி தலைவர் மு க ஸ்டாலின் சபாநாயகருக்கு கடிதம் ஒன்றினை எழுதி இருந்தார்.  அது குறித்து  சபாநாயகர் செய்தியாளர்களிடம் பேசியபோது இது குறித்தான அதிகாரபூர்வமான அறிவிப்பு இன்னும் வரவில்லை. வந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து இருந்தார். 

ஓசூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின்போது பொது சொத்துக்களுக்கு ஊறு விளைவிதத்ததாக மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை பெற்றதால் அவருடைய பதவி பறிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அவரது தணடனையை நேற்று உச்சநீதிமன்றம் உறுதி செய்து உத்தரவிட்டதும் குறிப்பிடத்தக்கது. அதனால் ஓசூர் தொகுதி தற்போது காலியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஏற்கனவே தமிழகத்தில் 20 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், இந்த தொகுதிகளுக்கு தேர்தல் வரும் என ஏற்கனவே எதிர்ப்பார்த்து கொண்டிருந்தது தமிழகம். இந்த நிலையில் தற்பொழுது ஓசூர் தொகுதியையும் காலியானதாக அறிவித்து சட்டபேரவை செயலாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.  

அதிகாரபூர்வமாக சபாநாயகர் தனபாலுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதிய நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் முழுமையாக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்ற திமுக தயாராகி வருகிறது. 21 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றால் திமுக ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதற்காகவே அந்த தொகுதிகளில் ஸ்டாலின் கிராமசபை கூட்டங்களை நடத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  இந்த தொகுதிகளுக்கு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலோடு, தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

hosur mla constituency announced as empty


கருத்துக் கணிப்பு

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் யாருக்கு சாதகம்?!
கருத்துக் கணிப்பு

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் யாருக்கு சாதகம்?!
Seithipunal