அதிரடியாக களத்தில் இறங்கும் பாஜக.. தமிழகத்தில் தடபுடலாகும் அரசியல்களம்.! - Seithipunal
Seithipunal


மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாஜக சார்பில் வெற்றிநடைபோடும் தமிழகம் என்ற தலைப்பில் கன்னியாகுமரியில் 7 மார்ச் 2021 அன்று தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.

தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி ஒரேகட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் பாண்டிச்சேரி அரசியல் கட்சிகள் கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை, வேட்பாளர்கள் தேர்வு என அரசியல்களம் பரபரப்பாகியுள்ளது. 

தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை களம்காணவுள்ள பாஜக, தங்களது கட்சியின் தேசிய தலைவர்களை தமிழகத்தில் களமிறக்கி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தமிழகத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தலைவர் ஜே.பி நட்டா ஆகியோர் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர். 

ஆனால், முன்னதாக நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது அதிமுக - பாஜக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகாமல் இருந்தது. இந்நிலையில், நேற்று இரவு 11.50 மணியளவில் அதிமுக - பாஜக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. அதிமுக - பாஜக கூட்டணியில் பாஜகவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கும் என்றும் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. 

இந்நிலையில், தமிழகத்தில் அதிமுக - பாமக - பாஜக கூட்டணி அதிகாரபூர்வமாக உறுதியாகியுள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாஜக சார்பில் வெற்றிநடைபோடும் தமிழகம் என்ற தலைப்பில் கன்னியாகுமரியில் நாளை (7 மார்ச் 2021) தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளார் என்று பாஜக சார்பில் அதிகாரபூர்வ தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Home Minister Amith Shah Election Campaign ADMK BJP Alliance Starts 7 March 2021 Kanyakumari


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->