நெஞ்சு வலியால் அவைதிப்பட முகிலனுக்கு., பரபரப்பு உத்தரவை பிறப்பித்த நீதிமன்றம்!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் சமூக செயல்பாட்டாளராக பலரால் பார்க்கப்படும் முகிலன், மீது சில பாலியல் குற்றங்கள் இருந்தது. அதன் காரணமாகவே அவர் தலைமறைவாக இருப்பதாக தெரிவித்தனர். இருப்பினும் முகிலன் எங்கே? என குரல் எழுப்பிய பொழுது தான் முகிலன் என்பவர் யார் என பலருக்கு கேள்வி எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, அவரை கண்டுபிடித்து தர கோரி நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு  தாக்கல் செய்யப்பட்டது. சிபிசிஐடி மற்றும் காவல் துறையில் பல இடங்களில் அவரை தேடி வந்தனர்.

திருப்பதியில், திருப்பதி ரயில்வே போலீசார் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதன் பின்னர் இவர் தமிழகத்தை சேர்ந்த முகிலன் என்பது தெரியவந்துள்ளது. ரயில் மூலம் காட்பாடி ரயில்வே நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு ரயில்வே போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். பின்னர் அவர்கள் சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைத்தனர். 

இந்நிலையில், திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக பெண் கொடுத்த புகாரில் பேரில், முகிலன் மீது பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறை, பின்னர் முகிலன் கைது செய்யப்பட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் இரவில் நெஞ்சுவலி என கூறியதால் முகிலனை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளித்து வந்தனர். 

இந்நிலையில், நெஞ்சுவலி காரணமாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முகிலனை சிபிசிஐடி போலீசார் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக ஆஜர்படுத்தினர். கரூர் பெண் அளித்த பாலியல் புகார் தொடர்பாக நீதிபதிகள் மீண்டும் விசாரணை நடத்தினர். அப்போது, 24 மணி நேரத்திற்குள் கரூர் நீதிமன்றத்தில் முகிலனை ஆஜர்படுத்த வேண்டும் என சிபிசிஐடி போலீசாருக்கு எழும்பூர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர் . இதையடுத்து போலீஸ் முகிலனை கரூர் நீதிமன்றதுக்கு ஆஜர்படுத்த அழைத்து சென்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

highcourt jundgement about mugilan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->