வைகோவின் மேல்முறையீட்டு வழக்கில் உயர் நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு!! - Seithipunal
Seithipunal


கடந்த 2009 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற நான் குற்றஞ்சாட்டுகிறேன் என்ற நூல் வெளியீட்டு விழாவில், விடுதலை புலிகளுக்கு ஆதரவாகவும்,அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசிற்கு எதிராகவும் வைகோ பேசியதாகவும், அவரின் பேச்சு இந்திய இறையாண்மைக்கு எதிராக இருப்பதாக கூறி வைகோ மீது அப்போது ஆட்சியிலிருந்த திமுக தேசதுரோக வழக்கு பதிவு செய்து சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை சிறப்பு நீதிமன்றம் கடந்த 10 ஆண்டுகளாக விசாரித்து வந்தது. 

இதனையடுத்து, இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய வழக்கில் வைகோ குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிபதிகள் 10 ஆயிரம் அபராதமும் ஒரு வருட சிறை தண்டனையும் அளித்து சிறப்பு நீதிமன்றம் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். 

தேச துரோக வழக்கில் ஓராண்டு சிறையை எதிர்த்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது இன்று விசாரணைக்கு வந்தது, இதனையடுத்து வைகோவுக்கு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய ஓராண்டு சிறை தண்டனை நிறுத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுயிட்டுள்ளது 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

highcourt judgement in vaiko case


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->