தமிழகம் பலமொழி பேசும் மதசார்பற்ற மாநிலம்.! தமிழ் கடவுள் முருகன் வழக்கில் நீதிமன்றம்.! - Seithipunal
Seithipunal


சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், தமிழ் இலக்கியங்களின் அடிப்படையில் முருகனை தமிழ் கடவுள் என தமிழக அரசிதழில் வெளியிடக் கோரி உத்தரவிடுமாறு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த இந்த மனுவை ராமநாதபுரத்தை சேர்ந்த திருமுருகன் என்பவர் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் திருமுருகன் தெரிவித்திருப்பதாவது, "முருகன் தமிழ் கடவுள் இதனை உறுதிப்படுத்த பல்வேறு இலக்கிய சான்றுகள் இருக்கின்றன. நான் தகவல் அறியும் உரிமை சட்டத்தில், முருகன் தமிழ் கடவுள் தானா? இல்லையா என ததகவல் கேட்டேன். அதற்கு அளிக்கப்பட்ட பதிலில் முருகன் தமிழ் கடவுள் இல்லை என தெரிவிக்கப்பட்டது.

முருகனை தமிழ் கடவுள் என அறிவித்து, அதை அரசிதழில் வெளியிடக் கோரி அரசுக்கு கடந்த ஜனவரி மாதம் 7ஆம் தேதி மனு அளித்தேன். ஆனால் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தமிழ் இலக்கிய ஆதாரங்களின் அடிப்படையில் முருகன் தமிழ் கடவுள் என அறிவித்து அரசிதழில் வெளியிட உத்தரவிட வேண்டும்" என்று அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்எம் சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர், "முருகனை தமிழ் கடவுள் என அறிவித்து அதை எப்படி அரசு அரசிதழில் வெளியிட முடியும். இந்து மதத்தில் பல கடவுள்கள் உள்ளனர். இலக்கியத்தின் அடிப்படையில் முடிவெடுக்க முடியாது. தமிழகம் மதசார்பற்ற ஒரு மாநிலம்.இங்கே பழமொழி, மதம், நம்பிக்கை கொண்டவர்கள் வாழ்கின்றனர். 

உங்களின் கோரிக்கையின் படி முருகனை தமிழ் கடவுள் என அறிவிப்பது மதசார்பற்ற தன்மையை பாதிக்கும்" என்று தெரிவித்தனர். மேலும், இந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

high court madurai division judgement


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->