அதிருப்தி எம்.எல்.ஏக்கள் வழக்கில்., அதிரடி உத்தரவை பிறப்பித்த உச்சநீதிமன்றம்!! - Seithipunal
Seithipunal


கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் காங்கிரஸ் இணைந்து தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியில் ஆட்சி அமைத்தனர். மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி முதலமைச்சராக பதவியேற்ற பிறகு தற்போது ஆட்சி நடைபெற்று வருகின்றது. கர்நாடகாவில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் எனில் 113 எம்எல்ஏக்கள் இருக்க வேண்டும். 

13 காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரை சந்தித்து தங்கள் ராஜினாமா கடிதத்தை கொடுத்துதனர்.உரிய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினர். 

இதனையடுத்து, கர்நாடக சபாநாயகர் 13 காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தன்னை நேரில் சந்தித்தால் மட்டுமே அவர்களின் ராஜினாமா கடிதத்தை ஏற்பேன் சபாநாயகர் அறிவித்திருந்தார். 

இந்தநிலையில், அதிருப்தியில் இருந்த 13 காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் உய்ர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர், எம்.ல்.ஏ-க்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அதிருப்தி எம்எல்ஏக்கள் 10 பேர் இன்று மாலை 6 மணிக்கு சபாநாயகர் முன்னிலையில ஆஜராகி தங்கள் ராஜினாமா கடிதத்தை அளிக்கலாம்.

மேலும், அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதத்தின் மீது சபாநாயகர் இன்றே முடிவு எடுக்க வேண்டும், சபாநாயகரை சந்திக்க  பெங்களூரு வரும் 10 அதிருப்தி எம்.எல்.ஏக்களின் பாதுகாப்பை மாநில டிஜிபி உறுதி செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவுயிட்டுள்ளது. சபாநாயகருக்கு எதிராக அதிருப்தி எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

high court karanataka mla


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->